சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அன்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைமை இயக்குநர் எஸ்.பாகுலேயன் தம்பி கூறியதாவது
"இந்திய வானிலை துறை அறிக்கையை அக்டோபர் 16-இல் வெளியிட்ட அறிக்கையில், நிகழாண்டு வட கிழக்குப் பருவ மழை காலத்தில் தென் தீபகற்பத்தில் இயல்பை விட 88 சதவீதமும், தமிழகத்தில் இயல்பை விட 90 சதவீதமும் மழை பொழிவுக்கான வாய்ப்பு இருக்கிறது என குறிப்பிட்டுள்ளது. அதாவது, இயல்பைவிட அதிகப்படியான மழையை பெறுவதற்குத்தான் 90 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது என்று பொருள்படும். அதாவது, இயல்பை விட 19 சதவீதம் கூடுதலாக இருந்தால், அதிகப்படியான மழை என்று பொருள்படும். ஆனால், இந்த விவரங்களைத் தவறாக குறிப்பிட்டு, "அதிக மழை குறித்து தெரிந்தும் சமாளிக்க தவறியது ஏன்?' என்ற தலைப்பில் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி இருக்கிறது. செய்தியில் இந்த ஆண்டு, வட கிழக்கு பருவமழை இயல்பைவிட, 90 சதவீதம் வரை கூடுதலாக பெய்ய வாய்ப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவறான தகவலாகும். இருப்பினும், வானிலை குறித்து சரியான தகவலை அச்சு, காட்சி ஊடகங்கள் தெரியப்படுத்த வேண்டும்.
முகநூல், டுவிட்டர் கணக்கு கிடையாது:
"முகநூல், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில், எந்த விதமான தனிப்பட்ட கணக்குகள் கிடையாது. எனது பெயரில், சமூக வலைதளங்களில் கணக்குகள் உள்ளன. அவற்றில் வானிலை தொடர்பான செய்திகளை வெளியிடுகிறார்கள். இதுபோன்ற வலைதளங்களில் என் பெயரைக் குறிப்பிட்டு வெளியிடப்படும் செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்' என வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர் ரமணன் கூறினார்.
No comments:
Post a Comment