முப்படை அதிகாரி பணிகளுக்கு 463 காலியிடங்கள்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி), மத்திய அரசின் பல்வேறு துறைகளில் ஏற்படும் அதிகாரி பணியிடங்களை தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது. தற்போது மத்திய அரசு பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த முப்படை அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்ப, தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கம்பைன்ட் டிபென்ஸ் சர்வீசஸ் எக்ஸாம் (2) – 2015 என்ற தேர்வின் அடிப்படையில் தகுதியான பட்டதாரி இளைஞர்கள் இதில் சேர்க்கப்படுகிறார்கள். 
இந்தியன் மிலிட்டரி அகாடமியில் 200 பேரும், கடற்படை அகாடமியில் 45 பேரும், விமானப்படை அகாடமியில் 32 பேரும் பயிற்சிக்காக சேர்க்கப்படுகிறார்கள். இதேபோன்று, சென்னை ஆபீசர் டிரெய்னிங் அகாடமியில் 175 ஆண்களும், 11 பெண்களும் (நான்டெக்னிக்கல்) பயிற்சிக்காக தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்தியன் மிலிட்டரி அகாடமி மற்றும் கடற்படை அகாடமியில் சேர விண்ணப்பிப்பவர்கள் 2.7.1992 மற்றும் 1.7.1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலங்களில் பிறந்திருக்க வேண்டும். விமானப்படை அகாடமியில் சேர விண்ணப்பிப்பவர்கள் 2.7.1992 மற்றும் 1.7.1996 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலங்களில் பிறந்திருக்க வேண்டும். ஆபீசர் டிரெய்னிங் அகாடமிக்கு 2.7.1991 மற்றும் 1.7.1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலங்களில் பிறந்திருக்க வேண்டும். 
இந்தியன் மிலிட்டரி அகாடமி மற்றும் ஆபிசர் டிரெய்னிங் அகாடமிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தியன் கடற்படை அகாடமிக்கு இயற்பியல், கணிதம் பிரிவில் பி.எஸ்.சி தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பி.இ/ பி.டெக் படித்திருக்க பெற்றிருக்க வேண்டும். விமானப்படை அகாடமிக்கு பனிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், கணிதம் பாடங்களை தேர்வு செய்து படித்து, ஏதேனும் பாடப்பிரிவில் பி.இ/ பி.டெக் படித்திருக்க வேண்டும். 
தேர்வு முறை?.

விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?.
1. பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.200/- யை செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை. விண்ணப்ப கட்டணங்களை ஸ்டேட் வங்கி மற்றும் அதன் துணை வங்கிகளில் நேரடியாகவும், இணையதள வழியாகவும் செலுத்தலாம். 
2. ஆன்லைன் படிவங்களை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். ஆன்லைனில் பார்ட் 1, பார்ட் 2 என இரு பிரிவாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். பார்ட் 1 விண்ணப்பத்தை முதலில் பூர்த்தி செய்து அனுப்பிவிட்டு, ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் கட்டணத்தை செலுத்த வேண்டும். பின்னர் ரசீது எண்ணுடன், பார்ட் 2 விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதனுடன் கையொப்பம், மார்பளவு புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் 2 கணினி பிரதிகளை பிற்கால உபயோகத்திற்காக நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.8.2015

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 1.11.2015

மேலும் விவரங்களுக்கு: http://upsconline.nic.in

No comments:

Post a Comment