சென்னையில் இயங்கி வரும் ஒரு பெரிய சாஃப்ட்வேர் டிசைன் கம்பெனியில் மெக்கானிக்கல், சிவில் பாடப்பிரிவுகளில் பி.இ/ பி.டெக் படிப்பில் கடைசி வருடம் படித்துவரும் மாணவர்களிடம் இன்டர்வியூ நடத்தினார்கள். இன்டர்வியூவின் போது, நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி மற்றும் மனிதவள மேம்பாட்டு அதிகாரி அமர்ந்திருந்தனர். மாணவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் சுலபமானவை, ஆனால் அதில் ஒருவர் கூட சரியான பதில் சொல்லவில்லை என்பது தான் வேதனைக்குறிய விஷயம். நிர்வாக அதிகாரியை தொடர்புகொண்டு பேசியபோது, "பள்ளியில் இருந்து கல்லூரி வரை 30 செ.மீ அளவில் இருக்கும் ஸ்கேலை மாணவர்கள் பயன்படுத்திவருகிறார்கள். அந்த ஸ்கேலில் ஒரு அடி, 12 இன்ச், 30 செ.மீ என்று குறிப்பிட்டிருக்கும். இதை தினமும் பார்த்திருப்போம், ஒரு அடிக்கு எவ்வளவு இஞ்ச் என்கிற கேள்வி இன்டர்வியூவில் கேட்கப்பட்டன. ஒரு மாணவர்கள் கூட சரியான பதிலை சொல்லவில்லை. டிசைன் பிரிவுக்கு முக்கிய தேவையே இந்த விஷயம் தான். இப்படி இருப்பவர்களை நாங்கள் எப்படி தேர்வு செய்வது" என்று மிகவும் வருத்தத்துடன் கூறினார்.
எதிர்கால நலனில் எப்போதும் www.kongumalar.com
ஒரு நிறுவனத்திற்கு 100 பேர் தேவையெனில், 10 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். வெறும் படிப்பு மற்றும் ஆப்டிட்யூட் மட்டுமே, நல்ல வேலையை கொடுப்பதில்லை. வேலைக்குத் தேவையான பயிற்சிகளும் முக்கியம். அதுமட்டுமா, வேலையில்லா சூழ்நிலையிலும் சம்பளத்தை பார்த்து வேலை தேடுபவர்கள் அதிகம். சம்பளத்தைப் பொருட்படுத்தாமல், அனுபவம் பெறுங்கள். நிச்சயமாக சம்பளம் உயர்வு கிடைக்கும்..
No comments:
Post a Comment