மார்ச், 26 ஆம் தேதி அன்று இந்தியா, ஆஸ்த்ரேலியாவுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி. அதனால் மக்கள் அனைவரும் அதைப் பற்றிதான் பேசுவார்கள். அதற்கு நடுவில், பட்ஜெட் பற்றிய செய்தி பேப்பரில் வந்தால் படிக்க மாட்டார்கள். அட, தமிழகத்தில் அமைதியான முறையில் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இன்னும் சில பேருக்கு, தமிழக அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்த விவகாரம் கூட தெரியாது. பார்த்தீங்களா, எங்க ஐடியாவ?. சிந்தித்து செயல்படுங்கள் நண்பர்களே!!!
இந்தியா தோல்லி அடைந்தால் பரவாயில்லை விடுங்கள். சிறந்த மாநிலமான தமிழ்நாட்டின் கடன் 2 லட்சத்து 11 ஆயிரம் கோடியாமா?. தெரியுமா. தமிழக அரசை சொல்லி என்ன பன்றது. நமக்கும் நம் மாநிலத்தின் மீது அக்கறை வேண்டும். இனிமேலும் அப்படி இருக்க வேண்டாம், கடனை குறைக்க மக்கள் தான் உதவி செய்ய வேண்டும். மக்கள் ஆசைப் படுவதனால் தான் இலவசம் என்கிற பெயர் வந்தது. கஷ்டப்படாமல், இலவசப் பொருட்களை வாங்கினால். அது நம்மை சோம்பேறி ஆக்கிவிடும்.
பொன்னி அரிசியில் சாப்பிடும் பலர் இலவசமா கிடைக்குதுனு, ஆடு, நாய், மாடுகளுக்கு தான் ரேஷன் அரிசியை உணவாகத் தருகிறோம். அரிசி விலை உயர்ந்த பொருள், அது இல்லாமல் எத்தனை குடும்பங்கள் பசியுடன் சாவுகின்றது தெரியுமா?. அரிசி தேவை என்றால் ரேஷன் கடையில் வாங்குங்கள், இல்லையெனில், வாங்காமல் விட்டுவிடுங்கள்.
அடுத்ததாக, நம்ம வீட்டுல (எல்.இ.டி) டி.வி, மிக்சி, கிரைண்டர் எல்லாம் இருக்கு. அதை தமிழக அரசு சும்மா கொடுக்குதுனு, வாங்கி வீட்டு ஸ்டோர் ரூமில் பூட்டி வைத்துக்கிறோம். இல்லைனா, ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். அந்த டி.வி யோட மதிப்பு 4000 ரூபாய்ங்க. வெறும், ஆயிரம் ரூபாய்க்கு கொடுத்து ஏமாந்து போருங்க. அரசுக்கும் தேவையில்லா கடனைக் கொடுக்குறீங்க?. வீட்டில் டி.வி இருந்தா, இலவச டி.வி வேண்டானு சொல்லுங்க. நான் ஏன் சொல்ல வேண்டும், தமிழக அரசு மக்களுக்காக கொடுக்கிறதுனு, நினைக்கிறீர்களா?.
நல்லா யோசிங்க?.
உங்க வீட்டுக்கு வெளிய தார் சாலை நன்றாக இருக்கிறதா?. அல்லது வெளியே வாகனங்களில் செல்லும் போது, ரோடு நன்றாக இருக்கிறதா?. இல்லை என்று தான் சொல்லமுடியும்.
தமிழக அரசிடம் பணம் இல்லைங்க?. இருந்தால் கண்டிப்பாக ரோடு போடுவாங்க!. கடன் ஏறிக்கொண்டுதான் போகுது. கடன் குறைந்தால், தமிழ்நாடு தான் முதல் மாநிலம்.
நாம என்ன செய்யவேண்டும்?.
1. வாங்கியதை கொடுக்க வேண்டாம். இனிமேலும் இலவசத்தை வாங்காமல் இருங்கள். அதுமட்டும் இல்லாமல், உங்க வீட்டில குண்டு பல்பு, டூப் லைட்டுகள் இருந்தால், எடுத்துவிட்டு எல்.இ.டி பல்புகளை மாற்றுங்கள். அதனால், உங்களுக்கும் லாபம், அரசுக்கும் லாபம். தேவையில்லாமல் லைட், ஃபேன் இயங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி செய்தால், வெயில் காலங்களில், மின் பற்றாக்குறை ஏற்படாமல். 24 மணி நேரமும் மின்சாரத்தை பயன்படுத்தலாம்.
2. குப்பைத்தொட்டியில் குப்பைகளை கொட்டுங்கள். சிலர், குப்பைத்தொட்டியில் போடாமல், வெளியே கொட்டுகிறார்கள். சுற்றுச்சூழல் பாதிக்கிறது. அதுமட்டும் இல்லாமல், கார்ப்ரேஷனில் இருந்து ஆட்கள் வந்து சுத்தம் செய்ய வேண்டும். சிறிய தவரால், ஆட்களுக்கு வேலை கொடுக்கிறோம். அவர்களுக்கு சம்பளம், நம்ம வரிப்பணம்?. தமிழக அரசுக்கு தினமும் குறைந்தது 1 லட்சமாவது செலவாகிறது. (குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுவீர்களா?)
இதுபோன்று நிறைய தவறுகளை செய்து வருகிறோம். சிந்தியுங்கள், பின்னர் செயல்படுங்கள். தவறுகளை திருத்தி நாமும் பயன் அடைவோம்.
தமிழக பட்ஜெட் நிலவரம் (2015):
வரி வருவாய் – ரூ.1,42,681.33 கோடி
செலவு – ரூ.1,47,297.35 கோடி
பற்றாக்குறை – ரூ.4,616.02 கோடி
.
No comments:
Post a Comment