பாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன? எப்படி செய்வது?

 
ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியது அவசியமாக உள்ளது. அதனால் பாஸ்போர்ட் நமக்கு தேவை என்றால் முதலில் நாம் அணுகுவது இடை தரகர்களை தான், ஆனால் தற்போது எந்த இடை தரகர்களும் இல்லாமலே நாமே நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க  இந்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை இப்போது ஆன்லைனில் மாறிவிட்டது. புதியதாக நிறுவப்பட்டுள்ள "பாஸ்போர்ட் சேவக் கேந்திரா"Passport Seva Kendras (PSK) என்கிற செயல்பாட்டின் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து…..
விண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களது பாஸ்போர்ட்டைப் பெற்று விடலாம். அந்த அதிகாரப்பூர்வ இணையதளம் இப்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TATA Consultancy Services) மூலம் பராமரிக்கப்படுகிறது. நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாததால் தரகர்களிடம் சென்று எடுக்கிறோம், இனி அந்த அவசியம் தேவையில்லை. உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பாஸ்போர்ட் எடுக்க என்ன விதிமுறை மற்றும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள போகிறோம்.

1) பாஸ்போர்ட் எத்தனை வகைப்படும்?
ஆர்டினரி (Ordinary)
அப்பிசியல் (Official)
டிப்ளோமேட்டிக் (Diplomatic)
ஜம்போ (Jumbo)
என நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. 

Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும், Official பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும்,Diplomatic பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், Jumbo பாஸ்போர்ட் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

2) பாஸ்போர்ட் பெறுவதில் எத்தனை முறைகள் உள்ளன?
இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஆர்டினரி (Ordinary), மற்றொன்று தட்கல்(Tatkal).

3) ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட்டை எத்தனை வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்?
ஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டைப் பத்து வருடங்களுக்குப் பயன்படுத்தலாம். மீண்டும் அதை அதற்கான கட்டணத்தைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ளலாம். ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும். இப்படி புதுப்பிக்கும்போது, 15 நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.

4) பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்?
முக்கியமாக இரண்டு ஆவணங்கள் வேண்டும்.

1. இருப்பிடச் சான்றிதழ் (ஏதாவது இரண்டு)
ரேசன் கார்டு
பான் கார்டு
வாக்காளர் அடையாள அட்டை
வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
எரிவாயு இணைப்பிற்கான ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

2. பிறப்புச் சான்றிதழ். (ஏதாவது ஓன்று)
விண்ணப்பதாரர் 26.01.89 அன்றைக்கு பிறந்த அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருந்தால் மட்டும் நகராட்சி ஆணையாளரால் அல்லது பிறப்பு & இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கும் பிறப்பு/இறப்பு சான்றிதல் ஏற்கதக்கதாகும்.என்றால் அரசாங்கத்தால் தரும் பிறப்பு சான்றிதழ்
பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறு சான்றிதழ்கள்
• 10வது மேல் படித்திருந்தால் ECNR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,
மேலும்  திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.
பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
எட்டாம் வகுப்புக்கு குறைவாகப் படித்திருந்தால் அல்லது படிக்கவே இல்லை என்றால் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற்று விண்ணப்பிக்கலாம். 26.01.1989-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.

சிறுவர்-சிறுமியர்
சிறுவர்-சிறுமியருக்கு (14 வயதுக்கு உட்பட்டவர்) பாஸ்போர்ட் எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் பாஸ்போர்ட் வைத்திருப்பவராக இருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது. பெற்றோர்க்கு பாஸ்போர்ட் இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே பாஸ்போர்ட் அளிப்பர்.

5) இணையதளம் மூலம் விண்ணப்பிபதால் என்ன பயன்கள்?
விண்ணப்பதாரர்கள் வட்டார பாஸ்போர்ட் அலுவலகத்திலுள்ள அதற்குரிய அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டியதற்கான திட்டமிட்ட தேதி, நேரம், தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணம் ஆகியவைகளை பெறமுடியும்
நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய தேவையில்லை

6) பாஸ்போர்ட் பெறுவதற்க்கான கட்டணம்?

பாஸ்போர்ட் கட்டணம் தெரிந்து  கொள்ள :

புதிய மற்றும் புதுபிக்க : 1500 ரூ (சாதரணமான முறை)
காணாமல் போனால் சேதமடைந்தால் – 1500 ரூ (பாஸ்போர்டு முடிந்து இருந்தால் – Expired)
காணாமல் போனால் சேதமடைந்தால் – 3000 ரூ (பாஸ்போர்டு Expireஆகவில்லை எனில்)
• 60 பக்கங்கள் வேண்டுமெனில் 500 ரூபாயைச் சேர்த்துக் கொள்ளவும்
தட்கல் முறையில் பெற 2000 ரூபாயைச் சேர்துக் கொள்ளவும்

7) தொலைந்து போனால்?
பாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல் துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் "Non Traceable" சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளி கேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு ஆர்டினரிக்கு 2500 ரூபாய் மற்றும் தட்கலுக்கு 5000 ரூபாய் கட்டணம்.

தட்கல் திட்டம்:

பொதுவாக, பாஸ்போர்ட் விண்ணப்பங்களை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் செலுத்தி 30 நாள்களில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு விடுகின்றன. அவசரமாக வெளிநாடு செல்பவர்க்கு உதவியாக விரைந்து பாஸ்போர்ட் பெறவும் வகையிருக்கிறது. இதற்கு "தட்கல் திட்டம்" என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் சிறப்புரிமை அடிப்படையில் விரைந்து பாஸ்போர்ட் பெற முடியும்.

தட்கல் திட்டத்தின் கீழ் வழங்கும் அனைத்து பாஸ்போர்ட்களைச் சார்ந்த காவல்துறையின் சரிப்பார்க்கும் பணி பாஸ்போர்ட் வழங்கிய பின் இருக்கும் கீழே சொல்லப்பட்ட பட்டியலிலிருந்து மூன்று ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் தட்கல் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பதார்ர் பெறமுடியும். மூன்று ஆவணங்களில் ஒன்று புகைப்படைத்துடன் கூடிய அடையாள அட்டையாக இருக்க வேண்டும்.

அவ்வாறு விரைந்து பாஸ்போர்ட் பெற விழைவோர் ரூ.2500/- கட்டணமாக செலுத்த வேண்டும். 3 ஆவணங்கள் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.
கீழ் வரும் ஆவணங்களின் பட்டியலிலிருந்து, பாஸ்போர்ட்-க்காக மூன்றை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை
இரயில்வே அடையாள அட்டைகள்
வருமான வரி அடையாள (Pan Card) அட்டைகள்
வங்கி அலுவலக புத்தகம்
எரிவாயு இணைப்பிற்கான ரசீது
ஓட்டுனர் உரிமம்
பிறப்பு சான்றிதழ்கள் (Birth Certificate)
தாழ்த்தப்பட்ட(எஸ்சி)/பழங்குடியினர் (எஸ்டி)/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) சான்றிதழ்கள்
சொத்து ஆவணங்களான பட்டா, பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தபத்திரங்கள் இன்னும் பிற குடும்ப அட்டைகள்
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களால் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான புகைப்பட அடையாள அட்டைகள்
ஓய்வூதிய ஆவணங்களான முன்னாள் இராணுவ வீரரின் ஓய்வூதிய புத்தகம்/ ஓய்வூதியம் செலுத்துவதற்கான ஆணை, முன்னாள் இராணுவ வீரரின் விதவை/சார்ந்தவர்கள் சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதிய ஆணை, விதவை ஓய்வூதிய ஆணை
மத்திய/மாநில அரசுகளால் வழங்கப்பட்ட பணிக்கான புகைப்பட அடையாள அட்டை, பொது நிறுவனங்கள், உள்ளூர் அமைப்புகள் அல்லது பொது வரையறை நிறுவனங்கள்

ஆன்லைனில் பாஸ்போர்ட் அப்ளை செய்வது எப்படி? அப்பாய்ன்மெண்ட் வாங்குவது எப்படி? வழிமுறைகள் என்ன?

http://passportindia.gov.in எனும் பாஸ்போர்ட் இணையத்தளத்தின் மூலமாக பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பதிவு செய்துக்கொள்ளலாம். உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பதிவு முறை, பாஸ்போர்ட் நியமனம் (Manage Appointment for Passport), போலீஸ் சரிபார்ப்பு (Police Verification), அப்பாய்ன்மெண்ட் வாங்குவது எப்படி, அப்ளை செய்த பாஸ்போர்ட் என்ன ஸ்டேட்டஸில் இருக்கு என்பதையும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

1) பதிவு முறை:
இதற்கு மின்னஞ்சல் ஐடி (Email Id) கட்டாயமாக தேவைப்படும்.
ஆன்லைன் விண்ணப்பம் தாக்கல்" என்ற தலைப்பில் கீழ் ஒரு புதிய பயனர்New Register என "பதிவு" மிகையிணைப்பை கிளிக் செய்க.கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது போல்.
பிறகு உங்கள் தனிப்பட்ட விவரங்களை நிரப்ப வேண்டும்.
வெற்றிகரமாக உங்களை பதிவு செய்த பிறகு, ஒரு "நன்றி" செய்தி பாஸ்போர்ட் சேவா போர்ட்டல் மூலம் ஒரு இணைப்பை பதிவு உங்கள் மின்னஞ்சல் ஐடிக்கு (Email Id) அனுப்பப்படுகிறது. (உங்கள் கணக்கை செயல்படுத்துவதற்கு)
உங்கள் மின்னஞ்சல் ஐடி அனுப்பப்படும் என்று இணைப்பை கிளிக் செய்து உறுதி படுத்த வேண்டும். (இணைப்பு 7நாட்களுக்கு பிறகு காலாவதியாகிவிடும்.)
உங்கள் கணக்கு செயல்படுத்தப்பட்டது என்று உறுதி அளிக்கும்.

2) பாஸ்போர்ட் Account Login:
நான் இப்போது "உள்நுழைவு" மிகையிணைப்பை கிளிக் செய்வதன் மூலம் ஏற்கனவே நீங்கள் கொடுத்த பயனர்பெயர் கொடுத்து உள்நுழையும்.
உங்கள் கடவுச்சொல் கொடுங்கள்.
உங்கள் திரையில் காட்டப்படும் தட்டச்சு எழுத்துகளை கொடுத்து கிளிக் செய்யவும்.

3) பாஸ்போர்ட் விண்ணப்பம் (Passport Application):
உடனே புதிய பக்கம் வரும். அதில் நாம் முன்பு சமர்பித்துள்ள படிவத்தின் நிலமையைக் காண (Application Status) ஒரு லிங்க்கும், மற்றொன்று புதிதாக பாஸ்போர்ட் அப்ளை செய்வதற்கும் இருக்கும்.
இரண்டாவதை "Apply for Fresh Passport / Reissue of Passport" கிளிக் செய்யவும்
அதன்பின் இரண்டு ஆப்ஷன்கள் வரும். விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து –Print செய்து பூர்த்தி செய்து ஆன்லைனில் அப்லோடு செய்யலாம். அல்லது அப்படியே ஆன்லைனில் அப்ளை செய்யலாம்.
அடுத்து வரும் புதிய பகுதியில்
முதன்முதலாக எடுப்பதா அல்லது புதிப்பதா என்றும் சாதாரணமான முறையில் வேண்டுமா தட்கல் முறையில் வேண்டுமா என்றும் சாதாரணமாக 36 பக்கங்கள் அல்லது கூடுதல் கண்டத்துடன் 60 பக்கங்கள் உள்ள பாஸ்போர்ட் வேண்டுமா என்று கேள்விகளுக்கு சரியான தேவையைக் கிளிக் செய்யவும். அதன்பின் மற்றொரு பகுதி வரும்.
அதில் உள்ள உங்களது அனைத்து விஷயங்களையும் நிதானமாகப் படித்து எழுத்து பிழை இல்லாமல் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஒவ்வொரு பக்கம் முடித்த பின்னர் "அடுத்து" என்பதை கிளிக் செய்யவும். நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை முடிவடையாத விட்டு & அடுத்த நாள் அதை பூர்த்தி தொடர விரும்பினால் "என் விவரங்கள் சேமி" கிளிக் செய்து, நீங்கள் கடைசியாக பூர்த்தி செய்த பக்கத்தை "சமர்ப்பி" என்பதை கிளிக் செய்தால் அது வரை நீங்கள் அடுத்த / முந்தைய பக்கம் இடையே செல்லவும். உங்கள் விவரங்கள் திருத்த முடியும். கடைசியில் ஒருமுறை நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் நீங்கள் எதையும் மாற்ற முடியாது.
• Given Name: உங்களது பெயர்
• Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து
• Previous Name: உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
• Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
• Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
• Place of Birth: பிறந்த ஊர்
• District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
• Qualification: உங்களது படிப்பு (SSLC pass  என்றால் NOC அப்ளை செய்யலாம்)
• Profession: தொழில்
• Present Address: தற்போதைய முகவரி
• Permanent Address: நிரந்தர முகவரி
• Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள்
• Phone No: தொலைபேசி எண்
• Email Address
Marital Status: திருமணமான தகவல்
• Spouse’s Name: கணவர்/மனைவியின் பெயர்
• Father’s Name: தந்தை பெயர்
• Mother’s Name: தாயார் பெயர்
தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்
• Voter ID, Athaar Card No, PAN Card Number இருந்தால் அதனையும் நிரப்பி விடவும்.
• Is applicant eligible for Non-ECR category? SSLC Pass செய்திருந்தால், வெளிநாட்டில் 3 வருடத்திற்கு மேல் இருந்திருந்தால், 50 வயதைத் தாண்டியிருந்தால் மற்றும்…. NOC கிடைக்கும். அப்போது கிளிக் செய்யவும்.
அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு Next Buttonஐ கிளிக் செய்து செல்லவும், கடைசியாக முக்கியமான ஓன்று அதில் உங்கள் வீட்டு அருகாமையில் உள்ள இருவரது முகவரியும், தொலைபேசி எண்ணும் கேட்கும். அதை தெளிவாக குறிப்பிடவும். ஏனென்றால் போலிஸ் வெரிபிகேஷன் அதான் முக்கியம்.

5) பாஸ்போர்ட் நியமனம் (Manage Appointment for Passport):
பாஸ்போர்ட் ஆபிசுக்கு எந்த தேதியில் செல்ல உங்களால் முடியுமோ அந்த தேதி அல்லது கிடைக்கும் தேதியையும் நேரத்தையம் தேர்ந்தெடுக்கவும். அதனையும் "Save" செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்
1) நியமனம் பக்கம் 5minutes தான் திறந்திருக்கும் அதற்குள் முடித்துவிட வேண்டும்.
2) அதே நாளில் இரண்டாவது முயற்சித்து கொண்டிருக்க முடியாது. அந்த வழக்கில் நீங்கள் 24 மணி நேரம் காத்திருந்து, அடுத்த நாள் தான் முயற்சிக்க வேண்டும்.
3)அதேபோல் அந்த பக்கத்தில் இருக்கும் பொது Reload/Refresh பட்டனை அழுத்தாதிர்கள்.
உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் அந்த பிரிண்டையும் + பணத்தையம் + சான்றிதழ் ஒரிஜினலையும் காப்பியையும் எடுத்துச் செல்லவும்.
அந்த அலுவலகத்தில் உங்களது சான்றிதழ்கள் (ரேஷன்கார்டு, ஓட்டர் ஐடி, பிறந்த நான் சான்றிதழ் போன்றன) சரிகாணப்பட்டு காப்பியைப் பெற்றுக் கொண்டு பணத்தையும் பெற்றுக் கொள்வார்கள். அதன் பின் உங்களை படம் பிடித்து போட்டு எடுத்துக் கொள்வார்கள். (எனவே போட்டோ கொண்டு செல்ல தேவையில்லை). எல்லாவற்றையும் சரியாக சரிபார்த்த பின் உங்களுக்குReceipt தருவார்கள். அவ்வளவு தான் உங்களது வேலை
(குறிப்பு: நீங்கள் கொடுக்கும் எல்லா ஆவணங்களிலும் ஒரே முகவரியும், பிறந்த தேதியும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்)

6) பாஸ்போர்ட் விண்ணப்ப தகுதி ஆன்லைனில் பார்க்க (View Passport Application Status Online):
நீங்கள் PSK-ல் உள்ள நடைமுறைகள் வெற்றிகரமாக முடிந்த பிறகு, ஒரு கோப்பு எண் பெறுவீர்கள், பிறந்த தேதி இரண்டையும் கொடுத்து "ட்ராக்" பொத்தானை கிளிக் செய்யவும். இப்போது உங்கள் பாஸ்போர்ட் எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

7) போலீஸ் சரிபார்ப்பு (Police Verification):
சில தினங்களில் போலிஸ் வெரிபிகேஷன் என்ற உங்களது இருப்பிடத்திற்கு சாட்சிக்காக உங்கள் பகுதியைச் சேர்ந்த காவல் துறை சரிபார்க்கும், அப்போது நீங்கள் உங்கள் VAO- Village Administrative Officer -ரிடம் நீங்கள் இந்த ஊரில் தான் வசித்துவருகிரீர்கள் என்று விண்ணப்பத்தில் எழுதி வாங்க வேண்டும் மற்றும் உங்கள் வீட்டு அருகாமையில் உள்ள இருவரது முகவரி கொடுத்தீர்கள் அல்லவா அவர்களையும் விசாரிப்பார்கள்.

8) Passport Dispatch:
அந்த பணி முடிந்து சில நாட்களில் பாஸ்போர்ட் தயாராக உள்ளது என, உங்கள் மொபைல் இல் அறிவிப்பு எஸ்எம்எஸ் பெறுவீர்கள். மேலும் அனுப்பப்பட்டதும் உங்கள் பாஸ்போர்ட் எண் தேதி குறிப்பிட்டு உங்கள் மின்னஞ்சல் ஐடி ஒரு மின்னஞ்சல் வரும். எனவே, ஒரு சரியான மின்னஞ்சல் ஐடி, தொலைபேசி எண் கொடுப்பது மிகவும் முக்கியமானது. சில நாட்களில் உங்கள் பாஸ்போர்ட் பதிவுத் தபாலில் உங்களது வீட்டிற்கே வந்துவிடும்.