சென்னையில், கணக்கெடுக்கும் குழுவினர் தங்களது பகுதிக்கு கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள வரும்போது பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை காண்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மழையினால் குடும்ப அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் சேதமடைந்திருந்தாலோ அல்லது மழை வெள்ளத்தில் அடித்துச் சென்றிருந்தாலோ அத்தகவலை மட்டும் கணக்கெடுக்கும் குழுவினரிடம் தெரிவித்தால் போதுமானது. வங்கி சேமிப்பு கணக்கு இல்லாதவர்களுக்கு தனியாக சேமிப்பு கணக்கு தொடங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், கணக்கெடுப்பு பணியின் போது வீடுகள் பூட்டப்பட்டிருந்தால், கணக்கெடுக்கும் அலுவலர் அவ்வீட்டினை 'மறு கணக்கீடு' என குறிப்பதோடு, பின்னர் அவ்வகையான வீடுகளுக்கும் மீண்டும் வந்து கணக்கீடு மேற்கொள்வார். சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் 100 சதவீதம் முழுமையான கணக்கீடு பணி மேற்கொள்ளப்படும். ஆகவே பொதுமக்கள் வெள்ள நிவாரண கணக்கெடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி கேட்டு கொண்டுள்ளார்.