தமிழ்நாடு எலக்ட்ரிக்கல் லைசன்ஸிங் போர்டில் வேலை


சென்னையில் இயங்கி வரும் தமிழ்நாடு எலக்ட்ரிக்கல் லைசன்ஸிங் போர்டில் ஜூனியர் உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். ஜூனியர் உதவியாளர் பணியில் சேர விரும்புவோர் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் படிப்புடன் கணினியை நன்கு பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்குக் குறையாமலும் 30 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்..
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து பிரிண்ட்அவுட் எடுத்து பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: The Secretary, Tamilnadu Electrical Licensing Board, Thiru-vi-ka Industrial Estate, Chennai-600032
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 21.9.2015
விவரங்களுக்கு: www.tnelb.gov.in 

No comments:

Post a Comment