இந்தியாவின் நான்காவது தூண் என்று சொல்பவர்கள் பத்திரிக்கையாளர்கள். பத்திரிக்கையாளர்கள் என்றால் அரசியல்வாதிகளில் இருந்து போலீஸ் வரை மரியாதை கொடுப்பார்கள். ஒரு அதிகாரியை பார்க்க வேண்டும் என்றாலும் நேரடியாக செல்லமுடியும்.
எந்த ஒரு கூட்டத்திற்கு சென்றாலும், பத்திரிக்கையாளர்களுக்கென்றே தனியாக ஒரு இடத்தை கொடுத்திருப்பார்கள். பத்திரிக்கையாளர் என்றால் லஞ்சம் வாங்குபவர்கள் கூட நம்மை பார்த்து பயப்படுகிறார்கள். இதுபோன்று கவுரவமாக இருக்கும் பத்திரிக்கையாளர்களில் சிலர் பணம் வாங்கிக்கொண்டு பத்திரிக்கையில் வெளியிடுகிறார்கள். பத்திரிக்கையாளர்கள் மொழியில் பணம் வாங்குவதை "கவர்" என்று தான் சொல்வார்கள். அதற்கு பெயர் லஞ்சம் இல்லையாம்.
100 சதவிதத்தில் 90 சதவித பத்திரிக்கைகளை படித்துப்பார்த்தால், மக்களுக்கு உபயோகமான செய்திகள் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. 2 ரூபாயிலிருந்து 5 ரூபாய் செலவு செய்து வாங்கும் பத்திரிக்கையில் கண்ணீர் அஞ்சலி, கொலை மற்றும் தற்கொலை செய்தி, சினிமா கிசுகிசு, மண்டபம் திறப்புவிழா என இதுபோன்ற செய்திகள் தான் அதிகமாக உள்ளது.
பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்
நல்ல விஷயங்களை எழுதவில்லை என்றாலும் பரவாயில்லை. தயவுசெய்து உங்களின் எழுத்துகளுக்கு காசு வாங்கவேண்டாம். நல்ல விஷயங்களை எழுதுவதற்கும், பத்திரிக்கையாளர்கள் காசு கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். கவர் என்றால் லஞ்சம் தான். லஞ்சம் வாங்கினால் உங்கள் மேல் இருக்கும் மரியாதை மக்களிடம் இருந்து குறைந்துவிடும். நல்லது செய்துவரும் பத்திரிக்கையாளர்களுக்கும், உங்களால் தவறான பெயர் மட்டுமே. எல்லா பத்திரிக்கையாளர்களும் காசு வாங்கிட்டுதான் பத்திரிக்கையில் போடுகிறார்கள் என்கிற பெயரை கொண்டுவந்துவிடாதீர்கள்.
உண்மையான பத்திரிக்கையாளர்கள் என்றால் பேட்டி எடுக்கும்போது டீ அல்லது காபி கொடுத்தாலும் வாங்க மாட்டார்கள்.
பத்திரிக்கையாளர்கள் நினைத்தால், நடுநிலை பத்திரிக்கையாக நிச்சயம் மாற்றமுடியும்.
Article By: www.kongumalar.com
இப்படிக்கு,
பணம் வாங்கும் பத்திரிக்கையாளர்களால், அவமானப்படும் நேர்மையான பத்திரிக்கையாளன்..
No comments:
Post a Comment