ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் 598 காலியிடங்கள்


ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் ஜூனியர் எக்சிக்யூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) மற்றும் ஜூனியர் எக்சிக்யூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பணிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். ஜூனியர் எக்சிக்யூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணியில் சேர விரும்புவோர் கணிதவியல், இயற்பியல் பாடப்பிரிவுகளில் பி.எஸ்.சி அல்லது எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி பாடப்பிரிவுகளில் பி.இ/ பி.டெக் படித்திருக்க வேண்டும். ஜூனியர் எக்சிக்யூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பணியில் சேர விரும்புவோர் எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவுகளில் பி.இ/ பி.டெக் படிப்புடன் கேட் 2014 அல்லது 2015 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்குக் குறையாமலும் 27 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்..
தேர்வு முறை?.
ஜூனியர் எக்சிக்யூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணிக்கு எழுத்து தேர்வின் அடிப்படையிலும், ஜூனியர் எக்சிக்யூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?.
விண்ணப்பதாரர்கள் www.aai.aero  என்கிற இணையதளத்திற்குச் சென்று ஸ்டெப்-1, ஸ்டெப்-2 என இரு நிலைகளில் விண்ணப்பம் சமர்பிக்க வேண்டும். ஸ்டெப்-1 படிவம் சமர்ப்பித்த பிறகு, கட்டணம் செலுத்திவிட்டு ஸ்டெப்-2 படிவம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஜூனியர் எக்சிக்யூட்டிவ் (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 9.10.2015
ஜூனியர் எக்சிக்யூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்) பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.10.2015

No comments:

Post a Comment