நம்ம தமிழ்நாட்டில் இருக்கும் இளைஞர்களில் 60 சதவிதம் பேர் வெளிநாட்டில் வேலை, நிறைய சம்பாதிக்கனும் என்று தான் நினைப்பார்கள். ஆனால், அங்கு ஏற்படும் பிரச்சனைகளை யாரும் நினைப்பதில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு புரோக்கர் மூலம் வெளிநாட்டு வேலைக்கு செல்கிறார்கள். அப்படி சென்றால் என்ன விளைவு ஏற்படும் என்று ஒரு இளைஞரின் குமுறல்களைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
"பிழைப்புக்காக வெளிநாடு செல்வோர் எனது அனுபவத்தை பாடமாக கொள்ள வேண்டும். எங்களது குடும்பம் பெரியது. அப்பா நிலத்தரகராக உள்ளார். எனது அண்ணன் இஸ்மாயில் குவைத்தில் வேலை செய்கிறார். நான் கம்பத்தில் லாரி ஓட்டிக்கொண்டிருந்தேன். குடும்பத்தில் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்ததால் நானும் குவைத் செல்ல விரும்பினேன். எனது அண்ணன் மூலம் புரோக்கரை அணுகினேன். மாதம் 23 ஆயிரம் சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.1 லட்சம் கட்ட வேண்டும் என்றும் சொன்னார்.
கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி குவைத் சென்றேன். இராக் எல்லை அருகேயுள்ள பாலைவனத்தில் என்னை கொண்டு சென்றுவிட்டனர். அங்கு ஒட்டகம் மேய்க்கச் சொன்னார்கள். நான் மறுக்கவே அரபியும், சுல்தானிகளும் என்னை அடித்து உதைத்தனர். காவல் அதிகாரி ஒருவரும் என்னை மிரட்டினார். தினமும் 2 மைதா ரொட்டிகள் மட்டுமே கொடுத்தனர். என்னை கண்காணிக்க 2 பேர் எப்போதும் உடனிருந்தனர். நான் பட்ட துன்பத்தை ‘வாட்ஸ் அப்’ மூலம் வீடியோவாக பகிர்ந்தேன். அங்கு இருந்து பலரின் உதவியால் தப்பித்து தமிழ்நாடு வந்துவிட்டேன். ஏதோ புது ஜென்மம் எடுத்ததுபோல உள்ளது. வெளிநாடு போக நினைக்கும் இளைஞர்கள் எந்த வேலைக்கு செல்கிறோம், முகவர் எப்படி என்பதை ஆராய்ந்து அதன் பின்னர் அங்கு செல்ல வேண்டும்." என்கிறார் சதாம் உசேன்.
எதிர்கால நலன்கருதி வெளியிடுவோர் www.kongumalar.com
நிறுவனங்கள் மூலம் வெளிநாடு செல்பவர்களுக்கு இதுபோன்ற பிரச்சனை இருக்காது. புதியதாக வேலை தேடிச் செல்பவர்கள் கொஞ்சம் உஷாராக இருங்க.
No comments:
Post a Comment