சர்வதேச பளுதூக்கும் போட்டிக்காக கடும் பயிற்சி எடுத்து வருகிறார்


சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மாதவ். தற்போது தனியார் கல்லூரியில் கெமிக்கல் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரின் தந்தை சண்முகம் உணவுத்துறையில் அலுவலராக பணிபுரிகிறார். அம்மா குடும்பத்தலைவி. அக்கா இரண்டு பேரும் தனியார் நிருவனத்தில் பணிபுரிகின்றார்கள்.
பள்ளியில் படிக்கும் போதிலிருந்து பளுதூக்கும் போட்டியில் சேர வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது?
“11 வது படித்துக்கொண்டிருக்கும் போது, பள்ளியில் பளுதூக்கும் விளையாட்டுக்காக மாணவர்களை தேர்வு செய்து கொண்டிருந்தார்கள்.அப்போது பளுதூக்கும் விளையாட்டின் பயிற்சியாளர் சந்திரசேகர் சார் என்னை பார்த்து உனக்கு இந்த விளையாட்டில் ஆர்வம் உள்ளதா என்றார். அதற்கு நானும் சரி என்று சொல்லிவிட்டு அந்த விளையாட்டில் சேர்ந்தேன்.
பிறகு சந்திரசேகர் சார் உதவியால் பயிற்சியில் ஈடுபட்டு, மாவட்ட அளவில் வெள்ளி பதக்கம் வென்றேன். வெள்ளி பதக்கம் மட்டும் போதாது தங்க பதக்கம் வாங்க வேண்டும் என்ற விடாமுயற்சியுடன், மாநில தங்கப்பதக்கம் வென்றேன்.
தேசிய அளவில் பளுதூக்கும் போட்டி பஞ்சாப் மாநிலத்தில் நடந்தது, இரண்டாம் பரிசாக வெள்ளி பதக்கம் பெற்றேன். நான் படித்த பள்ளியில் நான் மட்டும்தான் பயிற்சிக்காக தேர்வு பெற்றேன்.
தற்போது சர்வதேச பளுதூக்கும் போட்டியில் கலந்து கொள்வதற்க்காக கடும் பயிற்சி செய்து வருகிறன் " என்றார் மாதவ்
பளு தூக்குவதனால் உடல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா?
இல்லை, இதனால் உடல் நன்றாக இருக்கிறது.
உங்களின் எதிர்கால கனவு?
ராணுவத்தில் சேர்ந்து இந்தியாவிற்கு சேவை செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment