ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ பயணித்தால் வருகிறது பூந்துறை வழி பழனி ரோடு. அதில் மூன்று வழி சாலை உள்ளது. ஈரோட்டில் இருந்து கரூர், பழனி செல்லும் சாலை அது. அண்ணமார் பெட்ரோல் பங்க் சந்திப்பு என்றும் கூட சொல்லுவார்கள். போக்குவரத்து நெரிசல் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஆனால், போக்குவரத்துக்கு எந்த பாதுகாப்பும் இல்லாமல் இருந்துவந்தது. நிறைய விபத்துக்கள் ஏற்பட்டிருக்கிறது. விபத்துக்களை நேரடியாக பார்த்திருக்கிறேன். ஆத்திரம் பொருக்கவில்லை.
அதனால், ஈரோடு எஸ்.பி.க்கு மொபைல் நம்பருக்கு சிக்னல் இயக்கச்சொல்லி எஸ்.எம்.எஸ் செய்தேன். ஒரு மாதம் ஆனது பதிலும் வரவில்லை. சிக்னலும் இயங்கவில்லை. அடுத்தகட்டமாக, கலெக்டர் அலுவலகத்திற்கு வாட்ஸப் மூலம் தகவல் கொடுத்தேன். இரண்டு வாரமாக பதில் வரவில்லை. நேரடியாக கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் கன்ட்ரோல் அறைக்குச் சென்று, சிக்னல் பற்றிய விவரங்களை கேட்டேன். அதற்கு, பணியாளர் சொன்ன பதில் "சார், நான் எஸ்.பி அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துவிட்டேன். ஆனால் இன்னும் பதில் வரவில்லை". அடுத்த நாள் கலெக்டரை சந்தித்து, விவரங்களை எடுத்துச் சொன்னேன். கலெக்டரும் உடனடியாக எஸ்.பி அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தினார். கலெக்டர் சொல்லியும், சிக்னல் இயக்குவதில் தயக்கம் காட்டிவந்தார்கள் போலீஸ் அதிகாரிகள். ஏற்கனவே சிக்னல் சேவை இருக்கிறது. ஆனால் சிக்கனலை இயக்க என்ன கஷ்டம்.
அதற்குப்பின்னர், கலெக்டருக்கு தொடர்ந்து எஸ்.எம்.எஸ் மூலம் சிக்னல் பற்றிய தகவலை கேட்டுக்கொண்டே இருந்தேன். கலெக்டரை தொந்தரவு செய்துவிட்டேன். ஆனால், கலெக்டரின் நடவடிக்கை இல்லையெனில் நிச்சயம் அண்ணமார் சிக்னல் இயங்காமல் தான் இருந்திருக்கும். பல உயிர்களையும் இழந்திருப்போம்.
போலீஸ் அதிகாரிகளுக்கு ஒரு வேண்டுகோள்..
சிக்னலை இயக்க போலீஸ் தேவையில்லை. ஆட்டோமெட்டிக் தான். நாங்கள் பார்க்கும் பல சிக்னல்களில் போலீஸ் அதிகாரிகளே இல்லை. ஆனால், மக்கள் சிக்னலை மதிக்கிறார்கள். உயிர் பிரிந்த பிறகு வந்து எஃப்.ஐ.ஆர் போடுவது போலீஸ் வேலை இல்லைங்க. விபத்து ஏற்படாமல் இருக்கச்செய்வதும் போலீஸ் கடமைதான். போலீஸ் உங்கள் நண்பன் என்று சொல்வீர்களே, அதனால் தான் உங்களிடம் இதைச்சொல்கிறேன்.
எதிர்கால நலன்கருதி வெளியிடுவோர் www.kongumalar.com
No comments:
Post a Comment