வெளிநாடு வாழ் தமிழர் சாதனை - ஒரு பெரிய கார் நிறுவனத்தின் தில்லுமுல்லையே கண்டுபிடித்துள்ளார்.

ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் நிறுவனம், தனது டீசல் கார்களில் காற்று மாசுபாட்டு வீதத்தை, பிரத்யேக சாப்ட்வேரின் மூலம் குறைந்த அளவில் காட்டி பெருமளவிலான முறைகேட்டில் ஈடுபட்டிருந்தது. இந்த முறைகேட்டை, தமிழரான டாக்டர் அரவிந்த் திருவேங்கடம் ஆராய்ச்சியில் ஈடுபட்டு கண்டுபிடித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த டாக்டர் அரவிந்த் திருவேங்கடம், அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா பல்கலைகழக்கத்தில் ரிசர்ச் அசிஸ்டெண்ட் புரோபெஸ்சராக உள்ளார். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் ஆராய்ச்சி செய்து வருகிறார். ஒரு நாள், சக பேராசிரியருடன் இணைந்து வோக்ஸ்வேகன் காரை டெஸ்ட் ட்ரைவ் செய்திருக்கிறார்கள். அப்போது, அந்த சாப்ட்வேரின் குளறுபடியை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

வோக்ஸ்வேகன் நிறுவனம் சர்வதேச அளவில் விற்பனை செய்த ஒரு கோடிக்கும் மேற்பட்ட டீசல் கார்களில், மாசு கட்டுப்பாட்டு அளவை, சாப்ட்வேர் மூலமாக குறைத்துக் காட்டி முறைகேடு செய்துள்ளது என, இ.பி.ஏ., (சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை) எச்சரிக்கை விடுத்துள்ளன.

கார் வெளியிடும் புகையில், காரீயத்தின் (Lead) அளவை குறைத்துக் காட்டுவதற்கென, தனி சாப்டவேரை வோக்ஸ்வேகன் தமது கார்களில் பொருத்தியுள்ளது. இதனால், மாசு கட்டுப்பாடு சோதனையில் வோக்ஸ்வேகன் கார்கள் வெற்றிகரமாக தேறி, அதற்கான சான்றிதழுடன், விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன.

இந்த டீசல் கார்கள் வெளியிடும் புகையில் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜெனிக், நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் டை ஆக்சைடு போன்ற நச்சு வாயுக்கள் உள்ளன. இவை, சிறிய அளவில் காற்றில் கலந்தாலே ஆபத்தை விளைவிக்குமாம்.

வோக்ஸ்வேகனின் கார்கள் உட்பட, ஆடி, ஸ்கோடா மற்றும் சீயட் போன்ற கார்களிலும் வோக்ஸ்வேகனின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாம். அரவிந்த் சார் கொஞ்சம் இந்தியா பக்கம் வந்து  அனைத்து நிறுவனத்தின் கார்களையும் டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்க. நம்ம இந்தியாவில் சொல்லவா வேணும். 



No comments:

Post a Comment