மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் எல்லை பாதுகாப்புப் படையில் 797 கான்ஸ்டெபிள் பணியிடங்களில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. ஆண்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும். பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Cobbler, Tailor, Carpenter, Plumber, Painter, Draughtsman, Cook, Water carrier, Washerman, Barber, Sweeper, Waiter, Mali, Khoji ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐ.டி.ஐ சான்றிதழுடன் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதி நிலவரப்படி, 18 லிருந்து 23 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதேபோன்று, முன்னாள் ராணுவத்தினருக்கும் வயது வரம்பில் விலக்கு உண்டு.
காலியிடங்கள்: Cobbler - 86, Tailor - 35, Carpenter - 06, Plumber - 05, Painter - 06, Draughtsman - 03, Cook - 190, Water carrier - 155, Washerman - 89, Barber - 65, Sweeper - 138, Waiter - 03, Mali - 06, Khoji – 10
தேர்வு முறை?.
விண்ணப்பதாரர்களுக்கு Physical standard test (PST), Physical Efficiency Test (PET), சான்றிதழ் சரிபார்ப்பு, டிரேடு தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
Physical standard test (PST) தேர்வில் மார்பளவு மற்றும் உயரத்தை பார்க்கப்படும். உயரம்: 162.5 செ.மீ, மார்பளவு: 76 – 81 செ.மீ (பழங்குடியினருக்கு), உயரம்: 167.5 செ.மீ, மார்பளவு: 78 – 83 செ.மீ (மற்றவர்களுக்கு).
Physical Efficiency Test (PET) தேர்வில் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை, 24 நிமிடத்திற்குள் ஒடி முடிக்க வேண்டும். பின்னர், சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, டிரேடு தேர்வை நடத்தப்படும். டிரேடு தேர்வு முடிந்தவுடன் 100 கேள்விகளுடன், 100 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். ஜெனரல் அவேர்னஸ், கணிதம், ஆப்டிட்யூட், ஆங்கில அறிவு ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் விடை அளிக்கலாம். தேர்வுக்கு இரண்டு மணி நேரம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வில் தகுதியானவர்களை தேர்வு செய்து, மருத்துவ பரிசோதனை அனுப்பப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?.
இப்பணிகளில் சேர விரும்புவோர் இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும் முறை குறித்து வங்கியின் இணையதளத்தில் விரிவான தகவல்கள் உள்ளன.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Directorate general, Border security force, Block No 10, CGO Complex, Lodhi road, Newdelhi – 110003
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 01.07.2015
மேலும் விவரங்களுக்கு: www.bsf.nic.in
எல்லை பாதுகாப்புப் படையில் 797 கான்ஸ்டெபிள் வேலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment