வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் சுருக்கெழுத்து தட்டச்சு நிலை-3, இளநிலை உதவியாளர், தட்டச்சர், நகல் பரிசோதகர், ஓட்டுநர், நகல் எடுப்பவர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் மற்றும் முழுநேர பணியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
சுருக்கெழுத்து தட்டச்சு நிலை-3 பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சுருக்கெழுத்து தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கில முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை உதவியாளர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கில முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நகல் பரிசோதகர் மற்றும் ஓட்டுநர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும். நகல் எடுப்பவர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 6 மாதத்திற்குமேல் நகல் எடுப்பவராக பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரவு காவலர் மற்றும் முழுநேர பணியாளர் பணிக்கு தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது.
விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்குக் குறையாமலும் 30 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்..
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், வேலூர், வேலூர் மாவட்டம்.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 30.9.2015
No comments:
Post a Comment