கேந்திரிய வித்யாலயா சங்கேதன் கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் பணி


சென்னை மற்றும் பல்வேறு மாநிலங்களில் மத்திய மனித வளத்துறையின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா சங்கேதன் கல்வி நிறுவனத்தில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணியில் சேர விரும்புவோர் 50 சதவிகித தேர்ச்சியுடன் பனிரென்டாம் வகுப்பு அல்லது Diploma in education (D.Ed) படித்திருக்க வேண்டும். கூடவே சி.பி.எஸ்.சி நடத்திய Central Teacher Eligibility Test (CTET) தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பி.எட் படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியாது. 
ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணிக்கு மொத்தம் 2566 காலியிடங்கள் உள்ளன. இதில் தாழ்த்தப்பட்டோருக்கு 384 காலியிடங்களும், பழங்குடியினருக்கு 191 காலியிடங்களும், ஓ.பி.சி பிரிவினருக்கு 691 காலியிடங்கள் மற்றும் பொது பிரிவினருக்கு 1300 காலியிடங்களும் உள்ளன. 
எழுத்து தேர்வு, செயல்பாட்டு தேர்வு, திறமைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்ப கட்டணம்: ரூ.750/- (ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும்)
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை குறித்து விரிவான விவரங்களை அறிய www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment