Fact recruitment for graduates

உரம் மற்றும் இரசாயன தொழிற்சாலையில் 173 அப்ரண்டீஸ் பணியிடங்கள்
Fact என அழைக்கப்படும் அரசுத் துறை நிறுவனமான உரம் மற்றும் இரசாயன தொழிற்சாலையில் அப்ரண்டீஸ் பணியில் சேர விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ரூமென்டேஷன், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் டிப்ளமோ சான்றிதல் அல்லது இயற்பியல், வேதியியல் துறையில் பி.எஸ்.சி அல்லது ஃபிட்டர், மெஷினிஸ்ட், வெல்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், மோட்டார் அல்லது டீசல் மெக்கானிக், பிளம்பர் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ சான்றிதல் பெற்றிருக்க வேண்டும். ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் 23 வயதிற்குட்பட்டவர்களாகவும், பி.எஸ்.சி படித்தவர்கள் 25 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி குறிப்பிடவில்லை. நேரடியாக சென்று எழுத்துத் தேர்வை எழுத வேண்டும். எழுத்துத் தேர்வுக்கு ஒரிஜினல் பத்தாம் வகுப்பு சான்றிதல், சாதிச் சான்றிதல் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை கொண்டு வர வேண்டும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம்:
டிப்ளமோ: சிவில் மற்றும் கம்ப்யூட்டர் பிரிவுக்கு 05.01.2015 (காலை 09.00 மணிக்கு), கெமிக்கல் பிரிவுக்கு 05.01.2015 (மதியம் 12.30 மணிக்கு), மெக்கானிக்கல் பிரிவுக்கு 06.01.2015 (காலை 09.00 மணிக்கு), எலக்ட்ரிக்கல் பிரிவுக்கு 06.01.2015 (மதியம் 12.30 மணிக்கு), இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவுக்கு 07.01.2015 (காலை 09.00 மணிக்கு)
ஐ.டி.ஐ மற்றும் பி.எஸ்.சி: வேதியியல் பிரிவுக்கு 08.01.2015 (காலை 09.00 மணிக்கு), இயற்பியல் பிரிவுக்கு 08.01.2015 (மதியம் 12.30 மணிக்கு), ஃபிட்டர், மெஷினிஸ்ட் பிரிவுக்கு 09.01.2015 (காலை 09.00 மணிக்கு), வெல்டர் பிரிவுக்கு 09.01.2015 (மதியம் 12.30 மணிக்கு), இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் பிரிவுக்கு 12.01.2015 (காலை 09.00 மணிக்கு), எலக்ட்ரீசியன் பிரிவுக்கு 12.01.2015 (மதியம் 12.30 மணிக்கு), பிளம்பர், மோட்டார் மற்றும் டீசல் மெக்கானிக் பிரிவுக்கு 13.01.2015 (காலை 09.00 மணிக்கு)
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: FACT Training Centre, Udyogamandal, near kalamaessery , Kochi
மேலும் விவரங்களுக்கு: www.fact.co.in

No comments:

Post a Comment