தமிழ்நாடு வனத்துறையில் 181 காலியிடங்கள்

தமிழ்நாடு வனத்துறையில் forester மற்றும் அரசு ரப்பர் கழகத்தில் ஃபீல்டு அசிஸ்டன்ட் பணிகளில் ஏற்பட்டிருக்கும் காலியிடங்களை பூர்த்தி செய்யவதற்காக Tamilnadu forest uniformed services recruitment committee அறிவிப்பை வெளியிட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் முதல் தேதி நிலவரப்படி. விண்ணப்பதாரர்கள் 21 லிருந்து 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். Agriculture, animal husbandry, botany, chemistry, computer application/ computer science, environmental science, forestry, geology, horticulture, marine biology, mathematics, physics, statistics, veterinary science, wildlife biology, zoology ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொது பிரிவினருக்கு 53 காலியிடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 36 காலியிடங்களும், பிற்படுத்தப்பட்டோருக்கு 54 காலியிடங்களும், தாழ்த்தப்பட்டோருக்கு 37 காலியிடங்களும், பழங்குடியினருக்கு 09 காலியிடங்களும் உள்ளன.
எழுத்துத் தேர்வு:
பேப்பர் 1 & பேப்பர் 2 என இருபிரிவுகளில் தேர்வுகள் இருக்கும். பேப்பர் 1 பிரிவில் பொது அறிவு, aptitude, mental ability, data analysis, basic English, tamil language ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். பேப்பர் 2 பிரிவில் ஜெனரல் சயின்ஸ் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
தேர்வு மையம்: சென்னை. சேலம், மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி
தேர்வு நாள்: 22.02.2015 (பேப்பர் 1 – காலை 10 முதல் மதியம் 01 வரை), (பேப்பர் 2 – மதியம் 02 முதல் மாலை 05 வரை)
கட்டணம்: ரூ.60/- (விண்ணப்ப கட்டணம்), ரூ.262/- (தேர்வு கட்டணம்)
விண்ணப்பிப்பது எப்படி:
1. OMR விண்ணப்ப படிவத்தை அருகில் இருக்கும் தபால் அலுவலகத்தில் பெற்று, பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். தபால் அலுவலகங்களைப் பற்றி தெரிந்தகொள்ள இணையதளத்தை பார்க்கவும். 
2. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை "chief post master, anna road HO, Chennai – 600002 என்கிற முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.01.2015
மேலும் விவரங்களுக்கு: www.forests.tn.nic.in

No comments:

Post a Comment