பெருந்துறை வட்டத்தில கிராம உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

பெருந்துறை வட்டத்தில், காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு நவம்பர் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என பெருந்துறை வட்டாட்சியர் பை.சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பெருந்துறை வட்டத்தில், விஜயபுரி, துடுப்பதி, கோயில்பாளையம், எக்கட்டாம்பாளையம், புதுப்பாளையம், பாண்டியம்பாளையம், மேட்டுப்புதூர் ஆகிய கிராமங்களில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

காலிப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலமாக ஆள்கள் நிரப்பப்பட உள்ளனர்.

இப்பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் 5-ஆம் வகுப்பு தேர்ச்சியும், 10-ஆம் வகுப்புக்கு தேர்ச்சி பெறாதவராகவும் இருக்க வேண்டும். மேலும், பணியிடம் காலியாக உள்ள கிராமங்களின் உள்வட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் 35 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் 32 வயதுக்குள்ளும், இதர இனத்தவர் 30 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். தமிழ்மொழி தெரிந்தவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

தகுதி உடையவர்கள், தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர் 20-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment