சென்னை எழும்பூரிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இன்று இரவு சிறப்பு ரயில்

சென்னை எழும்பூரிலிருந்து இன்று இரவு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் விவரம்:

சென்னை எழும்பூர் - தூத்துக்குடி: இரவு 8 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி மற்றும் மீளவிட்டான் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை எழும்பூர் - மதுரை : இரவு 9 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி மற்றும் திண்டுக்கல் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி: இரவு 9.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை எழும்பூர் - செங்கோட்டை: இரவு 11 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை எழும்பூர் - தஞ்சாவூர்: இரவு 11.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மாம்பலம், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருபத்ரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை மற்றும் கும்பகோணம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ஹைதராபாத்- சென்னை கடற்கரை: ஹைதராபாத்தில் இன்று இரவு 9 மணிக்கு இந்த ரயில் புறப்படும்.

No comments:

Post a Comment