பென்ஷன் பணத்தில் பாதுகாப்பான சாலைகளை உருவாக்கி வருகிறேன், நான் ஒன்றும், அரசியல் பிரமுகர் இல்லை...இதைப் படித்துப்பாருங்கள்...

நம்ம ஊருல, ரோடு நல்லா இருக்கா?. என்னங்க, பொய் சொல்றீங்க. எங்க பார்த்தாலும், குண்டும் குழியுமாதான் இருக்கு. பாதாள சாக்கடைனு சொல்லிட்டு நல்லா இருந்த ரோடை குண்டும் குழியுமாக செய்துவிட்டார்கள். இரண்டு வருடம் ஆகியும் ரோடு போடவே இல்லை. இதனால, மழை காலங்களில் ரெம்பவே சிரமம் ஏற்படுகிறதுனு சொல்வோம். ஆனால், ஒருவர் அரசு ரோடு போடும் வரை, பாதுகாப்பு இல்லை என்று அவரே தன் சொந்த பென்ஷன் பணத்தில் குண்டும் குழியுமான ரோடுகளை சரிசெய்து வருகிறார். இளைஞர்களுக்கு ரோல் மாடலாகவும் இருந்து வருகிறார். யார் அவர்?. எங்கு இருக்கிறார்?.
இந்திய ரயில்வேயில், சிக்னல் இன்ஸ்ட்ரூமென்ட் மூலம் ரயிலையும், மக்களையும் பாதுகாக்க முடியும் என்று தன் பணியை சிறப்பாகச் செய்துவந்தவர் கங்காதர திலக் கட்னம். 35 வருட பணியில் இருந்து 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஓய்வு பெற்றார். ஜனவரி, 2010 ஆம் ஆண்டு ஒரு ஐ.டி கம்பெனியில் சாஃப்ட்வேர் டிசைன் கன்சல்டன்ட் வேலை கிடைத்தது. முதல் நாள் பணிக்கு செல்ல, தன்னுடைய ஃபியட் காரில் குண்டும் குழியுமான ரோட்டில் பயணம் செய்கிறார். குண்டும் குழியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. திடீரென்று, அந்த கார் குழியில் செல்ல, மழை தண்ணீர் அந்த வழியாக பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த பெண்ணின் யூனிபார்ம் முழுவதும் தெரித்தது. உடனே காரை நிறுத்திய கங்காதர திலக் கட்னம், அந்த பெண்ணிடம் வயது வித்யாசம் பார்க்காமல் மன்னிப்பு கேட்டார். பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர், தெரியாமல் அந்த பெண்ணின் மேல் சேற்று தண்ணீர் பட்டதும், ஐ.டி வேலையை விட்டுவிட்டார். உடனே தன் சொந்தச் செலவில் 4200/- ரூபாய்க்கு, குழியை சரிசெய்யத் தேவையான பொருட்களை வாங்கினார். அவருடைய வீட்டில் இருந்து, குண்டும் குழியுமான ரோட்டை சரி செய்யத் தொடங்கினார்.
எதற்காக அவர் இந்த சேவையை செய்கிறார்.
குண்டும் குழியுமான ரோடு மூலம் விபத்துகள் ஏற்படுவதை, அவர் தெரிந்துகொண்டார். விபத்துமட்டும் இல்லைங்க, குண்டும் குழியுமான ரோடு மூலம் டிராஃபிக், பெட்ரோல் அல்லது டீசல் செலவு, வாகனங்களுக்கு தேய்மானமும் ஏற்படுதுங்க. குண்டும் குழியுமான ரோடு மூலம் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனால் தான், அவர் அரசு எப்போது வந்து ரோடு போடுவது. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, தன் சொந்த செலவில் செய்துவருகிறார். அவர் ஹைதராபாத்தில் இந்த சேவை செய்து வருகிறார். தேர்தல் நேரம் வரும்போது மட்டும் புதிய ரோடு வரும். ஏனெனில், பிரச்சாரம் செய்வதற்கு குண்டும் குழியுமான ரோடில் எப்படி அவர்கள் பயணம் செல்வது. பொது சேவை செய்கிறோம்னு பிளக்ஸ் பேனர், டி.வி, நியூஸ்பேப்பர்னு விளம்பரத்திற்கு செலவு செய்து, மக்களை ஏமாற்றும் உலகில். இவர் தன் சொந்த செலவில், விளம்பரமே இல்லாமல் சேவை செய்திவருகிறார். சல்யூட் டு கங்காதர் அய்யா...
Article by www.kongumalar.com
மேலும் இவரது சேவையை பற்றி தெரிந்துகொள்ள: www.shramadaan.org

3 comments: