ஒரு தொகுதியில், இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 100 ஓட்டுகள் பதிவாகின்றன. ஒரு வேட்பாளர் 15 ஓட்டுகளும், இன்னொருவர் 10 ஓட்டுகளும், மூன்றாமவர் வாங்குகிறார்கள். மீதமுள்ள, 75 ஓட்டுக்களும், 'நோட்டா'விற்கு விழுகின்றன. இப்போது யார் ஜெயிப்பார்கள்?. நோட்டாவா?..
இல்லைங்க, தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி, 15 ஓட்டுகள் வாங்கிய வேட்பாளர் தான் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அதாவது, 'நோட்டாவிற்கு' விழுந்த, 70 ஓட்டுகளை கழித்து விட்டு, மொத்தம் அந்தத் தொகுதியில் பதிவான 30 ஓட்டுகள் என்ற அடிப்படையிலேயே ஓட்டுகள் எண்ணப்படும்.
'நோட்டா'வுக்கு விழுந்த, 70 ஓட்டுகளும் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளப்படாது என்கிறார்கள் தேர்தல் கமிஷன் அதிகாரிகள்.
'நோட்டா'விற்கு அதிக வாக்குகள் விழுந்தால் அந்த தொகுதியில் மறுதேர்தல் நடக்கும், போட்டியிட்ட வேட்பாளர்கள் திரும்பவும் போட்டியிட முடியாது அல்லது ஜனாதிபதி ஆட்சி இருக்கும் என்பதெல்லாம் சட்டப்படி உண்மையில்லையாம்.
நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு வாக்களியுங்கள். உடனே யார் நல்ல வேட்பாளர் என்று கேட்காதீர்கள். நிச்சயமாக உங்கள் தொகுதியில் ஒரு நல்ல வேட்பாளராவது இருப்பார். கண்டுபிடித்து வாக்களியுங்கள். மாற்றம் ஏற்படும்.
"வை ராஜா மை". 100 சதவீத ஓட்டுக்கு நான் ரெடி, நீங்க ரெடியா?.
No comments:
Post a Comment