100 பரோட்டா சாப்பிட்டா 25000 ரூபாய் பரிசுடன் சர்க்கரை, நீரிழிவு நோய், அஜீரணம், சிறுநீரகத்தில் கல் மற்றும் இருதய கோளாறு இலவசம்.

வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சாப்பிட்டு பெரிய காமெடி நடிகர் ஆனார் சூரி. உண்மையில் சூரி அத்தனை புரோட்டாவையும் சாப்பிட்டாரோ இல்லையோ. அவரைப் பார்த்து சில ஹோட்டல்களில் பரோட்டா போட்டி நடத்துகிறார்கள். சுவற்றில் நோட்டீஸ் ஒட்ட பயன்படுத்தப்பட்ட மைதா பசையை நம்ம சாப்பிடுகிறோம். பல குழந்தைகளுக்கு பிடித்த உணவு நூடில்ஸ் மற்றும் பரோட்டா தான். நூடில்ஸ் தரத்தை ஆராய்ந்து தவறுகளை கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால் மைதாவை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் பாதுகாப்பானதா?.

ஏன், மைதாவை பரிசோதனை செய்து தடை செய்யவில்லை?. அதிகாரிகளே, உங்க குழந்தைகளும் பரோட்டா சாப்பிடும்னு நினைக்கிறோம். உங்க குழந்தைகளை மனதில் நினைத்து,  நடவடிக்கை எடுக்கலாமே?.. இதுல வேற கலர் பரோட்டானு பெரிய ஹோட்டல்களில் விற்க ஆரம்பித்துவிட்டார்கள்.

மைதாவை எப்படி தயார் செய்கிறார்கள்?.

கோதுமையை நன்றாக அரைக்கப்பட்டு பவுடர் ஆக்குகிறார்கள். அந்த கோதுமை பவுடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். மஞ்சள் நிறத்தில் இருக்கும் அந்த கோதுமை பவுடரை பென்சோயில் பெராக்சைடு (Benzoyl Peroxide) இரசாயணம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள். தலைமுடிக்கு அடிக்கும் கருப்பு கலர் டையில் இருக்கும் இரசாயணம் தான் Benzoyl Peroxide.
இதுமட்டும் இல்லைங்க, மைதாவை மிருதுவாக்க Alloxan என்னும் இரசாயணம் கலக்கப்படுகிறது. சில மைதாவில் Artificial Colours, Mineral Oil, Taste Makers, Preservatives, Sugar, Saccarine,  Ajinomotto ஆகிய பொருட்களையும் சேர்க்கிறார்கள்.

எதிர்கால நலன்கருதி வெளியிடுவோர் www.kongumalar.com 

மைதாவில் தயாரிக்கப்படும் பொருட்களை சாப்பிட்டால் ஜீரண சக்தியை குறைத்துவிடும். இரவு உணவில் தவிர்ப்பது நல்லது. பரோட்டாவில் சத்துகள் எதுவும் இல்லை. மைதாவில் தயார் ஆன பொருட்களை சாப்பிட்டால் சர்க்கரை, நீரிழிவு நோய், அஜீரணம், சிறுநீரகத்தில் கல் மற்றும் இருதய கோளாறு போன்றவை வருவதனால் உலகில் பல நாடுகள் மைதாவை தடை விதித்துள்ளன. இனிமேலும் போஸ்டர் ஒட்டும் மைதா மாவில் தயார் ஆகும் பொருட்களை சாப்பிடுவீர்களா?.

நல்ல விஷயங்களை நண்பர்களுக்கு பகிரலாமே...

No comments:

Post a Comment