தொலைக்காட்சியில் தினமும், லட்சக்கணக்கில் செலவு செய்து விளம்பரம் செய்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.


ஒரு பெரிய நகைக் கடை அல்லது வெளிநாடுகளில் வேலை வாங்கித்தரும் பெரிய கல்லூரி என்று நடிகர், நடிகைகளை நடிக்க வைத்து லட்சக்கணக்கில் செலவு செய்து தொலைக்காட்சியில் விளம்பரம் செய்து வருகிறார்கள். நியூஸ் தொலைக்காட்சியையும் விட்டு வைக்கவில்லை. இதுபோன்று விளம்பரங்களை பார்த்து ஏமாந்துபோன காலம் போய்விட்டது. மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். "ஒரு இளம் நடிகரை வைத்து கல்லூரி விளம்பரம் வருகிறது. அந்த நடிகர், அந்த கல்லூரியில் படித்து வெளிநாட்டில் வேலை செய்துவருகிறேன் என்று சொல்கிறார்". இது ஏமாற்று விளம்பரம்,  என்று எல்லோருக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது ஏன், தினமும் லட்சக்கணக்கில் செலவு செய்து, மக்களை தொல்லை படுத்துகிறீர்கள்?..
நீங்கள் உண்மையிலேயே வேலை வாங்கிக் கொடுத்தால், உங்களது பழைய மாணவர்களே, உங்களது கல்லூரியைப் பற்றி நல்ல விதமாகச் சொல்வார்கள்..(எடுத்துக்காட்டாக. ஒரு மசாலா கம்பெனியை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அந்த கம்பெனியில் 50 சதவிதம் பேர் மாற்றுத்திறனாளிகள்). அல்லது
நகைக் கடை உரிமையாளர்கள், விளம்பரத்திற்கு செலவு செய்யும் பணத்தை, ஏழை பெண்களின் திருமணத்திற்கு வாங்கும் நகையின் விலையில் குறைத்துக் கொடுங்கள். தானாகவே விளம்பரம் ஆகும். உதவியை எப்படி வேண்டும் என்றாலும் செய்யலாம்.
டி.ஆர்.பி ரேட்டிங். யை அதிகரித்து விளம்பரங்களில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்படும் தொலைக்காட்சிகள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதற்கு, தொழிலதிபர்கள் ஆகிய நீங்களே காரணம்?.. 

தமிழ்நாட்டில் நிறைய தெருக்களில் குப்பைதொட்டி இல்லை. அதனால், குப்பையை எல்லா இடத்திலும் கொட்டுகிறார்கள். தமிழக அரசிடம், குப்பை தொட்டியை வாங்க பணம் இல்லையாம். உங்களது நிறுவனத்தை விளம்பரம் செய்ய, தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து தெருக்களுக்கும் குப்பை தொட்டியை வாங்கிக் கொடுங்கள். மக்களிடம் தானாக விளம்பரம் சென்றடையும்...


No comments:

Post a Comment