என்ஜினீயரிங் படிச்சா வேலை கிடைக்காதுனு சொன்னாங்க. அதனால் தான் ஆர்ட்ஸ் படிப்பில் சேர்ந்தேன். நான் செய்த தவறை நீங்களும் செய்யாதீர்கள்.


பக்கத்து வீட்டு அண்ணன் என்ஜினீயரிங் படித்தார், வேலை கிடைக்கவில்லை. அவரது நண்பர்களுக்கும் வேலை இல்லை என்று சொன்னார். என்ஜினீயரிங் படித்தால் வேலை கிடைக்காது, ஆர்ட்ஸ் குரூப் எடுத்துப் படினு அட்வைஸ் கொடுத்தார். நானும், அவர் சொன்னதைச் செய்தேன். பி.எஸ்.சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படித்து முடித்தேன். எனக்கு வேலை கிடைத்திருக்கும் என்று நினைக்கிறீர்களா?. அதுதாங்க இல்லை?. படிக்கும் போது, நான் அரியரும் வைக்கவில்லை. ஒரு வருடம் வேலை இல்லை. அடுத்தது, என்ன செய்வது என்று புரியாமல், கல்லூரிப் பேராசிரியரின் உதவியை நாடினேன். அவரோ, முதுகலைப் படிப்பை படி என்றார். அதே கல்லூரியில் ஹெச்.ஆர் பிரிவில் எம்.பி.ஏ படித்தேன். இந்த படிப்பிலும் அரியர் இல்லைங்க?. ஆனா, நல்ல வேலை கிடைக்கவில்லை. மாதம் 8000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து வருகிறேன். 



அந்த மாணவனைப் போன்று நிறைய மாணவர்கள் இந்த தவறை செய்து வருகின்றனர்.
கல்லூரியில் எந்தப் படிப்பை தேர்வு செய்யலாம்?. எல்லோரும் எதற்காகப் படிக்கிறோம்?. எதிர்கால வாழ்க்கையில் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். அதற்கு என்ன செய்ய வேண்டும்?.
என்ஜினீயரிங் படிக்கலாமா?.
ஆர்ட்ஸ் கல்லூரியில் பி.எஸ்.சி, பி.காம் படித்தவர்களை நிறுவனங்களில் வேலை வாங்குபவர் தான் என்ஜினீயர். டாக்டர் படிப்பை முடித்தால் டாக்டர் என்று சொல்வார்கள். என்ஜினீயரிங் படிப்பை முடித்தால் என்ஜினீயர் என்று சொல்வார்கள். ஆர்ட்ஸ் படிப்பை முடித்தால் என்ன வென்று சொல்வார்கள்?..
இது போன்றுதான், ஆர்ட்ஸ் படிப்பை படித்தவர்களின் வாழ்க்கை கேள்விக்குறி?. தமிழகத்தில் 565 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. ஆனால், தற்போது தொழிற்சாலைகள் குறைவாகவே உள்ளது. எதிர்காலத்தில், நிறைய தொழிற்சாலைகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துவருகிறது. புதிய நிறுவனங்களுக்கு, என்ஜினீயரிங் படித்தவர்களைத் அதிகமாக தேர்வு செய்வார்கள். குறிப்பாக, ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல் துறை மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆர்ட்ஸ் படித்தவர்களுக்கு இது போன்ற நிறுவனங்களில் வேலை இல்லை.
ஆர்ட்ஸ் படிக்கலாமா?.
வங்கியில் வேலை வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆர்ட்ஸ் துறையில் ஏதேனும் ஒரு பிரிவை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். பி.எஸ்.சி, பி.காம், பி.சி.ஏ ஆகிய படிப்பை முடித்தால் போதும் ஐ.பி.பி.எஸ் தேர்வை எழுதலாம். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் வங்கி வேலையில் சேரலாம். முதுகலைப் படிப்பில் சேர விரும்புபவர்கள், எம்.பி.ஏ அல்லது எம்.காம் படிக்கலாம். ஆனால், இதற்கான வேலை வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். ஏனெனில், ஒரு நிறுவனத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மனிதவள மேம்பாட்டு அதிகாரி போதுமானது. அக்கவுண்ட்ஸ் பிரிவில் இரண்டு நபர். ஆர்ட்ஸ் படித்தவர்கள் மொத்தம் 4 நபர்கள் போதுமானது. ஆனால், என்ஜினீயரிங் படித்தவர்கள் புரோடெக்ஷன், குவாலிட்டி என அனைத்து பிரிவிலும் வேலை செய்வார்கள். ஆர்ட்ஸ் படிப்பதற்கு பதில் என்ஜினீயரிங் படித்தால், எதிர்காலத்தில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
தற்போது என்ஜினீயரிங் படித்து வேலை இல்லாதவர்கள். முயற்சி செய்தால், நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். ஏன், வேலை இல்லை என்றால் பரவாயில்லை. நீங்களே ஒரு நிறுவனத்தை தொடங்கி 10 நபருக்கு வேலை கொடுக்கலாம். தொழில் செய்ய, 15 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறது.
அக்ரிகல்சுரல் படிக்கலாமா?.
எதிர்காலத்தில் விவசாயத்தை கெடுக்காமல் இருந்தால், அக்ரிகல்சுரல் படிப்பவர்களுக்கு வாழ்க்கை நன்றாக இருக்கும். விவசாயம் இல்லை என்றால், அக்ரிகல்சுரல் படிப்புக்கும் வேலையில்லை. வேலை வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். தமிழக அரசு, வருடத்தில் குறைந்தபட்சம் 200 காலியிடங்களை மட்டுமே நிரப்பும்.
டாக்டருக்கு படிக்கலாமா?
இரண்டு கோடிக்கு மேல் பணம் இருந்தால் படிக்கலாம். எதிர்காலத்தில் எம்.பி.பி.எஸ் படித்தால் மதிப்பிள்ளை, எம்.எஸ் போன்ற மேல்படிப்பை படிக்க வேண்டும். எம்.எஸ் டிகிரியை படிக்க 1.5 கோடினு சொல்றாங்க.
எதிர்காலத்தை நினைத்து முடிவு செய்யுங்கள். வாழ்க்கை உங்கள் கையில்.









No comments:

Post a Comment