தமிழகத்தில் 7243 நர்ஸ் வேலை 


தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் மருத்துவ சேவைப் பணியாளர் தேர்வு வாரியம் 7243 நர்ஸ் பணிகளில் ஏற்பட்டிருக்கும் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் பெண்களுக்கு 6792 காலியிடங்களும், ஆண்களுக்கு 451 காலியிடங்களும் உள்ளன. 
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள், ஒப்பந்த ஊதிய அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரிவார்கள்.
நர்ஸ் பணியில் சேர விரும்பும் பெண்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் நர்சிங் துறையில் டிப்ளமோ அல்லது இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடவே மாநில அரசின் அனுமதி பெற்ற மருத்துவமணையில் குறைந்தபட்சம் 3 வருட நர்சிங் பயிற்சி மற்றும் 6 மாதம் மகப்பேறு உதவியாளர் (மிட் ஒய்ப்) பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
நர்ஸ் பணியில் சேர விரும்பும் ஆண்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் நர்சிங் துறையில் டிப்ளமோ அல்லது இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடவே மாநில அரசின் அனுமதி பெற்ற மருத்துவமணையில் குறைந்தபட்சம் 3 வருட நர்சிங் பயிற்சி மற்றும் 6 மாத காலம் மனநல மருத்துவ பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
இந்த ஆண்டு ஜூலை 01 ஆம் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்குக் குறையாமலும் 58 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அனைத்து பிரிவினருக்கும், வயது வரம்பில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்: பெண்களுக்கு -  6792, ஆண்களுக்கு 451. (மொத்த காலியிடங்களில் இருந்து 30 சதவிதத்தில் 3.5 சதவிகிதம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) பரிவினருக்கு ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது). அதேபோன்று, மாற்றுத்திறனாளிகளுக்கும் 3 சதவிகிதம் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது.
சம்பளம்: ரூ.7,700/- (மாதம்)
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு 2 1/2 மணி நேரம் நடைபெறும். அதில் 100 மதிப்பெண்களுக்கு 200 அப்ஜெக்டிவ் கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் 30 ஆகவும், மற்றவர்களுக்கு 35 மதிப்பெண்களாகவும் உள்ளன. இந்த தேர்வில், தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கும் முறை இல்லை. கேள்விகள் அனைத்தும், டிப்ளமோ படிப்பு அளவில் இருக்கும்.
சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் கோவையில் எழுத்துத் தேர்வு நடைபெறும். தேர்வுக்கு வருவதற்கான பயண செலவை சம்பந்தபட்டவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும். தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களை, முதல்கட்டமாக 451 பேருக்கு (இருபாலரும்) சான்றிதழ்களை சரிபார்த்து பணியில் அமர்த்தப்படுவர். மீதம் உள்ளவர்களுக்கு, அடுத்தகட்டமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
1. விண்ணப்பிக்கும் முன் புகைப்படம் மற்றும் கையெழுத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
2. தங்களை தொடர்பு கொள்வதற்கு சரியான மொபைல் நெம்பர் மற்றும் இ-மெயில் முகவரியை கொடுக்க வேண்டும்.
3. www.mrb.tn.gov.in என்கிற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.
4. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.300/-, மற்றவர்களுக்கு ரூ.600/- விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனிலோ, ஆஃப்லைனிலோ செலுத்தலாம்.
5. ஆஃப்லைனில் செலுத்த விரும்புபவர்கள் சலானை பிரிண்ட் எடுத்து இந்தியன் வங்கியில் செலுத்தவும். ஆன்லைனில் செலுத்துபவர்கள் டெபிட் கார்டு/ கிரெடிட் கார்டு/ நெட் பாங்கிங் மூலம் செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.05.2015
ஆன்லைனில் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி: 11.05.2015
ஆஃப்லைனில் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி: 13.05.2015
தேர்வு நாள்: 28.06.2015 (காலை 10 மணி முதல் 12.30 வரை).
ஏதேனும் உதவிக்கு 1860 345 0112 என்கிற இலவச எண்ணை அழைக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு: www.mrb.tn.gov.in

No comments:

Post a Comment