வெப்பத்தை குறைக்க ஏ.சி இருக்கிறது. ஆனால் சுத்தமான காற்றை சுவாசிக்க மரம் வேண்டுமே.
ரியல் எஸ்டேட் வந்து விவசாயம் போனது. இப்போ சாலை அகலப்படுத்தும் பணியினால் பல நூறு மரங்கள் போகிறது.
இன்னும் சில ஆண்டுகளில் மரம் இல்லாத தமிழகம் என்கிற பெருமையை நாம் பெறுவோம் என்று நினைக்கிறேன்...
ஈரோட்டில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் நூற்றுக்கணக்கான பெரிய மரங்களை சாலை அகலப்படுத்தும் பணிக்காக வெட்டிவிட்டார்கள். இனிமேலும் தாமதித்தால் மீதம் இருக்கும் மரங்களையும் வெட்டிவிடுவார்கள். மரங்களை வெட்டி லாரிகளில் ஏற்றுகிறார்கள்.
மரங்கள் விடும் சாபம் தான் "அக்னி" வருவதற்கு முன்னே நம்மளை வெயில் வாட்டி எடுக்கிறது.
Article by www.kongumalar.com
இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் குறைவு தான். கல்லூரி வாகனங்கள் மட்டுமே அதிகமாக செல்கின்றன. தினமும் ஒரு மணி நேரம் கல்லூரி வாகனம் செல்லும் சாலையில் அகலப்படுத்துதல் அவசியமா?. குண்டும் குழியுமான சாலையை சரி செய்தாலே போதுமே...
மரம் இல்லையெனில் தண்ணீர் இல்லை, வெப்பம் அதிகம்.. என்னம்மோ போங்க, எதிர்காலத்தை நினைத்தால் ரொம்ப கஷ்டமா இருக்கு!!!
No comments:
Post a Comment