ஈரோடு சிறகுகள் சார்பாக கடந்த 7-12-2015 அன்று கடலூரில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்தோம். ஆனால், பல்லாயிரக்கணககன மக்கள் அடிப்படை வசதிகூட இல்லாமல் தவித்துவருவதை பார்த்து மிகவும் வருந்தினோம். அதனால், இந்த வாரமும் கடலூர் சென்று, அடிப்படை வசதிக்கான பொருட்களை கொடுக்கலாம் என்று முடிவுசெய்துள்ளோம். குறைந்தபட்சம் 1000 குடும்பங்களுக்காவது நிவாரணம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம். உங்களால் முடிந்த உதவியையும் செய்யலாம். 

ஒரு குடும்பத்திற்கு தேவையான முக்கிய பொருட்கள் :                
பெட்ஷீட்-1, ஆண், பெண் துணி - 1 செட் (வேஷ்டி, சட்டை, நைட்டி, சேலை அல்லது சுடிதார்), குழந்தை ஆண், பெண் துணி -1 செட், மக் மற்றும் பக்கெட் - 1, அரிசி, ரவை - 2 கிலோ, மளிகை சாமான் -1 செட் (தேவையானவை மட்டும்), நாப்கின்-1, பாய் -1. சலவை செய்யப்பட்ட பழைய துணிகளையும் கொடுக்கலாம்.  

சிறு உதவிகளாக இருந்தாலும், கஷ்டப்படுவர்களை நிச்சயம் சந்தோஷம் ஏற்படுத்தும். ஈரோடு சிறகுகளுடன் கரம் கோர்க்கவிரும்புபவர்கள் தொடர்புகொள்ளலாம். 
ஸ்ரீனிவாசன் 9789186186, விமல் 9786669999