தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய உள்துறை இணை செயலாளர் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு நாளை (26.11.15) முதல் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

சென்னை வந்ததும் தமிழக அரசின் முதன்மை நிர்வாகம் வருவாய் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்திக்கும் இக்குழு, தமிழக மழை வெள்ளம் பாதிப்புகள் குறித்து கேட்டறிகின்றனர். பின்னர் மேசமாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட இடங்களை இரண்டு குழுக்களாக பிரித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.

No comments:

Post a Comment