திறமைசாலிகளுக்கு நம்ம நாட்டில் மதிப்பே இல்லையா?...

ந்தியாவில் இருக்கும் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் ஒரு ஏழை மாணவன். புதியதாக ஒன்றை கண்டுபிடித்துள்ளார். சிறியதாக செய்து, அந்த பிராஜெக்ட் வெற்றி கிடைத்துவிட்டது. நிச்சயமாக எதிர்காலத்தில் இந்த பிராஜெக்ட் பெரிய அளவில் சென்றடையும் என்று நினைத்துள்ளார். ஆனால், இந்த பிராஜெக்ட் பெரிய அளவில் செய்ய வேண்டும் என்றால் மூன்று லட்சமாவது தேவைப்படும். ஏழை மாணவனுக்கு உதவி செய்ய, யாரும் முன்வரவில்லை. அவன், திறமையை வளர்த்திக்கொண்டு மலேசியாவில் ஒரு கம்பெனிக்கு விண்ணப்பித்தார். வேலையும் கிடைத்தது. ஒரு வருடம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பிராஜெக்ட்களுக்கென்றே செலவு செய்து வெற்றியை பெற்றுவிட்டார். இந்தியாவுக்கு, அந்த பிராஜெக்ட்டை எடுத்து வந்து, நிறுவனம் தொடங்க முடிவு செய்திருக்கிறார். வங்கியில் வாங்கிய கடன் பணம், லஞ்சம் கொடுத்தே செலவாகிவிட்டது என்று ஏமாற்றத்துடன் மறுபடியும் வெளிநாடு புறப்பட்டு சென்றிருக்கிறார். விடாமுயற்சியால் தற்போது வெளிநாட்டில் இவரும் மிகப்பெரிய கோடீஸ்வரர்



இந்தியாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள் நிறைய கண்டுபிடித்துள்ளார்கள். ஆனால், அவர்களுக்கு ஏற்ற உதவிகளை யாரும் செய்ய முன்வருவதில்லை. அதன் காரணமாகவே, இந்தியர்கள் வெளிநாடுகளில் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால், இந்தியர்கள்தான் மிகவும் திறமைசாலிகள் என்று வெளிநாட்டில் இயங்கும் பல நிறுவனங்களில் சத்திய நாடெல்லா, சுந்தர் பிச்சை போன்ற பலரையும் தலைமை பொறுப்பில் அமரவைத்திருக்கிறார்கள்.

எழுத்து: www.kongumalar.com

ஏன், இந்த கதையும் அப்படித்தான்... மணிகண்டன் என்பவர் ஈரோடு சூர்யா என்ஜினீயரிங் கல்லூரியில் கடைசி வருடம் படித்துவருகிறார். கட்டிடங்களில் மேல்கூறைக்கு கான்கிரிட் போடுகிறோம் அல்லவா. அந்த கான்கிரிட் சாதாரணமாக செட் ஆகவேண்டும் என்றால் பத்து மணி நேரம் தேவைப்படும். ஆனால், மணிகண்டன் கண்டுபிடித்துள்ள கலவையினால் 2.5 மணி நேரத்திற்குள் செட் ஆகிவிடுகிறது. அதுமட்டும் இல்லாமல், சாதாரண கான்கிரிட்டை விட தரமானதாகவும் இருக்கிறது என்று நிருபித்துள்ளார். அந்த கான்கிரிட் தரத்தை ஆய்வு செய்து, மணிகண்டன் அவரின் கண்டுபிடிப்புக்கு ஜப்பானில் இருக்கும் குமமோட்டோ பல்கலைக்கழகம் பாராட்டி சான்றிதழையும் வழங்கியுள்ளது. மணிகண்டனின் கண்டுபிடிப்பிற்கு, தமிழ்நாட்டில் எந்தவித பாராட்டும் கிடைக்கவில்லை என்பதே வருத்தப்படவேண்டிய விஷயம். இந்திய சாதனையாளர்களுக்கு வெளிநாட்டில் தான் மதிப்பு கிடைக்கிறது என்பது மணிகண்டனின் கண்டுபிடிப்பும் ஒரு எடுத்துக்காட்டு.

"மணிகண்டன் தன் சொந்த செலவில் ஜப்பான் சென்று கண்டுபிடிப்பை காண்பித்து பாராட்டு பெற்றுவந்துள்ளார். மணிகண்டனைப் போன்று பல மாணவர்கள் இருக்கிறார்கள். இனி அவர்களை வெளிக்கொண்டுவருவதே எங்களின் நோக்கம்" என்கிறார் சூர்யா கல்லூரியின் நிர்வாக அதிகாரி எஸ்.கே சண்முகசேகர்.  

"கிராமங்களில் இருந்துவரும் மாணவர்களை பெற்றோர்கள் வெளியூர்களுக்கு அனுப்ப தயங்குகிறார்கள். மணிகண்டனைப் போன்று அனைவரும் தைரியத்துடன் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும். தைரியம் வந்தால், தானாகவே கண்டுபிடிப்புக்கான ஐடியாவும் வந்துவிடும். ஆங்கிலத்தில் தவறாக பேசிவிடுவோமோ என்கிற தயக்கத்துடன் பல மாணவர்கள் இருப்பதனால் தான், அவர்களை வெளிகொண்டுவர முடியவில்லை. மாற்றம் கொண்டுவதற்கான வழிகளை செய்துவருகிறோம்" என்கிறார் சூர்யா கல்லூரியின் முதல்வர் எஸ்.விஜயன்.

"சுயநீராற்றும் கான்கிரிட் பற்றிய சோதனை ஆய்வு" என்கிற தலைப்பில் செயல்திட்ட கட்டுரையை ஜப்பான் கும்மோடா பல்கலைக்கழகத்தில் சமர்பித்திருந்தேன். இந்தியாவில் இருந்து அனுப்பட்ட 32 செயல் திட்டங்களில் நான் அனுப்பிய செயல் திட்டம் மிகச்சிறந்த செயல்திட்டத்திற்கான  விருதை பெற்றுத்தந்தது. இதற்கு உதவியாக இருந்த கமலக்கண்ணன் சார் மற்றும் பேராசிரியர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்கிறார் மணிகண்டன்.

இனிமேலும் இந்தியாவில் இருக்கும் இளைஞர்களை வெளிநாட்டிற்கு அனுப்பிவந்தால், நிச்சயமாக இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றமுடியாது.