பயணச்சீட்டு முன்பதிவில் இடைத்தரகர்கள் மற்றும் முகவர்களின் ஆதிக்கத்தை தடுக்கும் வகையில் ரயில்வே துறை புதிய திட்டம்

பயணச்சீட்டு முன்பதிவில் இடைத்தரகர்கள் மற்றும் முகவர்களின் ஆதிக்கத்தை தடுக்கும் வகையில், முன்பதிவு ரயில் பயணச்சீட்டு ரத்து மற்றும் கட்டணம் திருப்பியளிப்பு விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Article by www.kongumalar.com

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

       ரயில் புறப்படுவதற்கு 48 மணிநேரத்துக்கு முன் பயணச்சீட்டை ரத்து செய்யும்போது, இரண்டாம் வகுப்பு இருக்கை உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டுக்கு ரூ.30 ஆக பிடித்தம் செய்யப்பட்ட தொகை இனி ரூ.60-ஆக உயர்த்தப் பட்டு பிடித்தம் செய்யப்படும். மூன்றடுக்கு ஏசி பெட்டிகளுக்கான பயணச்சீட்டுக்கு தற்போது பிடித்தம் செய்யப்படும் தொகை ரூ.90-லிருந்து ரூ.180-ஆக உயர்த்தப்பட உள்ளது. இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கு ரூ.60-லிருந்து ரூ.120-ஆகவும், இரண்டடுக்கு ஏசி பெட்டிகளுக்கு ரூ.100-லிருந்து ரூ.200-ஆகவும் உயர்த்தப்பட உள்ளது. 

ரயில் புறப்படுவதற்கு 4 மணிநேரம் முன்பாக ரத்து செய்தால் மட்டுமே பணம் திருப்பியளிக்கப்படும். ரயில் புறப்பட்ட பின் பயணச்சீட்டு ரத்து செய்தால் பணம் திருப்பி பெற முடியாது. 

காத்திருப்பு பட்டியல், ஆர்ஏசி பயணச்சீட்டுகளை பொருத்தவரை, ரயில் புறப்படுவதற்கு அரை மணிநேரம் முன்பாக ரத்து செய்தால் மட்டுமே பணம் திருப்பியளிக்கப்படும். அதன்பிறகு, ரத்து செய்தால் பணம் திருப்பி பெற முடியாது என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை இன்று முதல் நடைமுறைக்கு வரும் என ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.