இப்படி இருந்தால் எத்தனை அடி வாங்கினாலும், நம்மால் எழுந்திருக்க முடியாது!!.


ஜப்பானில்108 எரிமலைகள் உள்ளன. பெரும்பாலும் சுனாமி மற்றும் பேரழிவைத் தருகின்ற நிலநடுக்கங்கள் என பல இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. 1923 ஆம் ஆண்டில் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கத்தினால் 140,000 பேர் இறந்தனர். மறுபடியும் 1995 ஆம் ஆண்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி அன்று ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் பல சேதங்கள் ஏற்பட்டன. சுனாமியும் விட்டுவைக்கவில்லை. அதேபோன்று, மறுபடியும் 2012 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதியில் 6.1 அளவிலான நிலநடுக்கம் வடகிழக்கு ஜப்பானின் கரையோரங்களை தாக்கியது. இத்தனை பிரச்சனைகளையும் சமாளித்து, ஜப்பான் இன்றும் பசுமையாகவும், தொழில்நுட்பத்தில் முன்னோடியாகவும் இருந்துவருகிறது. எத்தனை நிலநடுக்கம் மற்றும் சுனாமி வந்தாலும் தன்நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் வாழ்ந்துவருகிறார்கள் ஜப்பானிய மக்கள்.

எழுத்து: www.kongumalar.com

ஜப்பானின் வளர்ச்சிக்கு காரணம் என்ன?.

2011 ஆம் ஆண்டில், ஜப்பானில் இருந்து ஒரு பெண் ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்காக சென்னை வந்திருந்தார். கல்லூரியில் இருக்கும்போது, ஜப்பானில் 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று ஒரு செய்தி வந்தவுடன். "எனக்கு படிப்பும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். நான் என் நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும்" என்று உடனடியாக புறப்பட்டு சென்றுவிட்டார்.  ஜப்பானின் குறுகிய கால வளர்ச்சிக்கு மக்களின் ஒற்றுமையே காரணம்.

ஆனால், தற்போது தமிழ்நாட்டில் பலத்த மழையால் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவு மற்றும் தங்க இடமில்லாமல் தவித்து வருகிறார்கள். உதவி செய்ய சிலர் மட்டுமே முன்வருகிறார்கள். ஆனால், ஜப்பானை (12.6 கோடி மக்கள் தொகை) விட இந்தியாவில் (121 கோடி) தான் மக்கள் தொகை அதிகம். மக்கள் தொகை இருந்து என்ன பலன்.

இந்தியாவில் பல கோடி பேர் "அப்பாட, மழையில் இருந்து நம்ம தப்பிச்சோம்" என்று நினைப்பவர்கள் தான் அதிகம். எத்தனை கோடி சம்பாதித்து என்ன பலன்?. இயற்கையிடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. ஜப்பானிய மக்களைப் போன்று இந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்திருந்தால், உலக அளவில் இந்தியா தான் முதலிடத்தில் இருந்திருக்கும். இனிமேலாவது, ஒற்றுமையாக இருந்து, தமிழ்நாட்டையாவது முன் உதாரணமாக மாற்றுவோம்.