குடியரசு தினத்தையொட்டி அஞ்சல்துறை சார்பில் அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டி தேசிய அளவில் நடத்தப்படவுள்ளது. துடிப்பான பாரதம் என்ற தலைப்பில் நடக்கின்ற இப்போட்டிகளில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.
இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் சொந்த வடிவமைப்பை அனுப்ப வேண்டும். மற்றவர்கள் வரைந்ததை நகல் எடுத்து அனுப்ப கூடாது. வடிவமைப்பு மையினாலோ, வண்ணங்களினாலோ வரையப்பட்டிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் மூலம் அச்சடிக்கப்பட்டதோ, பிரதிகளோ ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. வடிவமைப்பின் பின்புறம் அவர்களது பெயர், வயது, முழு முகவரி, தொலைபேசி, செல்போன் எண்கள், மின்அஞ்சல் முகவரி அவசியம் குறிப்பிட வேண்டும்.
வடிவமைப்பு தங்களது சொந்த வடிவமைப்பு, உண்மையான வடிவமைப்பு, நகல் எடுக்கப்படவில்லை என்று உறுதிமொழி படிவத்துடன் அனுப்ப வேண்டும். அஞ்சல் உறையின் மீது குடியரசு தினம்-2016 அஞ்சல் வடிவமைப்பு போட்டி என குறிப்பிட்டிருக்க வேண்டும்.
வடிவமைப்புகளை வரும் 30.11.15 ம்தேதிக்குள் ADG (PHILATELY), Room No.108(B), Dak Bhawan, Parliament Street, New Delhi-110001 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
For 24*7 newsupdate www.kongumalar.com
இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், 2வது பரிசாக 6 ஆயிரம் ரூபாயும், 3வது பரிசாக 4 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
No comments:
Post a Comment