தமிழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் என்ஜினீயரிங் படிப்பை முடித்து வேலையின்றி தவித்து வருகிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் பல நிறுவனங்கள் வெறும் டிகிரியை மட்டும் எதிர்பார்ப்பது இல்லை. மாணவர்களிடம் படிப்பை தவிர வேறு மொழி அறிவு மற்றும் வேலை சம்பந்தமான பயிற்சி இருக்கிறதா என்பதை பார்க்கிறார்கள்.
"லட்சக்கணக்கான என்ஜினீயரிங் மாணவர்கள் இருக்கிறார்கள். அதில் பல மாணவர்கள் வெறும் டிகிரி சான்றிதழை மட்டும் காண்பிக்கிறார்கள். சில மாணவர்கள் மட்டுமே டிகிரி சான்றிதழுடன் Web designing, PHP, Java போன்ற பயிற்சிகளையும் எடுத்துள்ளார்கள். நிறுவனத்தில் வேலைக்கு வருபவர்கள் இதுபோன்ற பயிற்சிகள் பெற்றிருந்தால், நாங்கள் பயிற்சி தர அவசியமில்லை. அதனால் தான், வெறும் டிகிரி சான்றிதழ் மட்டும் வைத்திருப்பவர்களை நாங்கள் வேலைக்கு எடுப்பதில்லை. படிக்கும்போதே இதுபோன்ற பயிற்சிகளை பெற்றால், படித்தவுடன் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது" என்கிறார் சான் டெக்னோ சொல்யூஷன் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி மொஹமத் ஆசிக்.
கல்லூரியில் படிக்கும்போதே மாணவர்கள், வேலை வாய்ப்புக்கு தேவையான பயிற்சிகளை எடுத்துக்கொண்டால் வேலை வாய்ப்பில்லா சூழ்நிலையை குறைக்க முடியும்.
www.kongumalar.com
கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவுகளில் பி.இ/ பி.டெக்/ பி.எஸ்.சி அல்லது எம்.சி.ஏ படித்தவர்கள் அல்லது படித்துக்கொண்டிருப்பவர்கள் எந்த வகுப்புகளில் பயிற்சி பெறலாம்?..
1. ASP (Application Service Provider),
பயன்பாட்டு சேவை வழங்குநர் என்றும் இதனைச் செல்லலாம். Standard Protocol எனப்படும் http மூலம் வாடிக்கையாளர்களுக்கு கணினி சார்ந்த சேவைகளை வழங்கும் Customer Relationship Management போன்ற சாஃப்ட்வேர்களை பயன்படுத்துவது.
2. ASP.NET
ASP.NET பயிற்சி பெறுபவர்கள், வலைத்தள மேம்பாட்டுப் (Website Development) பணியில் டைனமிக் வலை பக்கங்களை (Dynamic webpage) உருவாக்க முடியும். வெப்டிசைனிங் சம்பந்தப்பட்ட வேலையில் சேருவதற்கு இந்த பயிற்சி உதவியாக இருக்கும்.
www.kongumalar.com
3. Assembly Language,
Assembly Language என்பது Low – level புரோகிராமிங் லாங்குவேஜ். கம்ப்யூட்டர் ஹார்டுவேரை இடைமுகப் (Interface) படுத்துவதற்காக இந்த லாங்குவேஜ் பயன்படுகிறது.
4. C & C++,
ஐ.டி நிறுவனங்கள் C & C++ புரோகிராமிங் லாங்குவேஜ் படித்தவர்களை அதிகமாக தேர்வு செய்கிறார்கள். இந்தப் பயிற்சியை பெற்று சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். சான்றிதழ் அவசியம் என்று பல நிறுவனங்களின் கருத்து.
5. HTML/ Java Script/ CSS
மொபைல் அப்ளிகேஷன் டவலப்மெண்ட் செய்ய HTML/ Java Script/ CSS படித்திருக்க வேண்டும். இந்த பயிற்சியை பெற்றிருப்பவர்கள், மொபைல் அப்ளிகேஷனை உருவாக்க முடியும்.
6. COBOL
இதுவும் கம்ப்யூட்டர் புரோகிராமிங் லாங்குவேஜ் தான். பிசினஸ் பயன்பாட்டுக்காக COBOL உருவாக்கப்பட்டுள்ளன.
7. DB2
டேட்டா பேஸ் சர்வர் இது. ஐ.பி.எம் நிறுவனத்தால் IBM DB2 என மேம்படுத்தப்பட்டுள்ளன.
8. Blackberry Development,
பிளாக்பெரி நிறுவனத்தில் பணிபுரிய விரும்புவோர் இந்த பயிற்சியை எடுத்துக்கொள்ளலாம்.
9. iPhone Development,
ஐஃபோன் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புவோர் இந்த பயிற்சியை எடுத்துக்கொள்ளலாம்.
10. Mobile Testing,
மொபைல் பயன்பாடும், மொபைல் தயாரிக்கும் நிறுவனமும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. மொபைல் நிறுவனங்களில் பணிபுரிய விரும்புவோர் இந்தப் பயிற்சியை எடுத்துக்கொள்ளலாம். அல்லது சொந்தமாகவும் ஒரு சர்வீஸ் சென்டர் வைத்துக்கொள்ளலாம்.
11. Wireless Technology,
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்படி, பல இடங்களில் வயர்லெஸ் இன்டர்நெட் கனெக்ஷன் கொண்டு வர உள்ளனர். இந்தப் பயிற்சியை எடுத்துக்கொண்டால் சொந்தமாகவோ, ஒரு நிறுவனத்திலோ வேலை செய்யலாம்.
12. Java/ J2EE,
அப்ளிகேஷன் டவலப்மெண்ட் பணிக்கு இந்தப் பயிற்சி உதவியாக இருக்கும்.
13. Wordpress,
வெப்சைட் டிசைனிங் பணிக்கு பயன்படும் பிளாக்கர் என்றும் கூட சொல்லலாம். இந்தப் பயிற்சி பெற்றிருந்தால், wordpress டெம்ப்ளட் பயன்படுத்தி ஒரு வெப்சைட் யை உருவாக்கமுடியும்.
14. Android Delopment,
மொபைல் நிறுவனங்களில் பணிபுரிய இப்பயிற்சி உதவியாக இருக்கும்.
15. PHP/ MySQL,
PHP என்பது சர்வர்-சைடு-ஸ்கிரிப்ட் லாங்குவேஜ். வெப்சைட் டவலப்மெண்ட் பணிக்காக இந்தப்பயிற்சி உதவியாக இருக்கும். MySQL (MY Sequel) பயிற்சி பெற்றால், வெப் அப்ளிகேஷனிற்கு பயன்படும்.
16. SEO/ Web Designing,
SEO என்பது Search Engine Optimization. Web Designing/ SEO பயிற்சி பெற்றால் வெப்சைட் டவலப்மெண்ட் பணிக்கு உதவியாக இருக்கும்.
17. Debugging & Soldering in SMD Boards,
SMD (Surface Mount Device) போர்ட் சர்வீசிங் பயிற்சி பெறுபவர்களுக்கு கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைக்க உதவியாக இருக்கும்.
18. PLC/ SCADA.
PLC என்பது Programmable Logic Controller. தொழில் நிறுவனங்களில் ஆட்டோமெட்டிக் பயன்பாட்டிற்காக இப்பயிற்சி உதவியாக இருக்கும். இதை டிஜிட்டல் கம்ப்யூட்டர் என்றும் கூட சொல்லலாம். SCADA என்பது இன்டஸ்ட்ரீயல் கன்ட்ரோல் சிஸ்டன். அதாவது, கணினி மூலம் நிறுவனங்களில் நடக்கும் செயல்முறைகளை கண்காணிக்க உதவும். இந்த இரண்டு பயிற்சியையும் பெற்றவர்கள், தொழில் நிறுவனங்களில் வேலை கிடைக்க உதவியாக இருக்கும்.
19. Visual Basic, Microsoft MS Access, Microsoft MS SQL, Microsoft MS Excel மற்றும் சில வகுப்புகளுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பயிற்சி அளித்து தேர்வு மூலம் சான்றிதழ் வழங்குகிறது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1800-102-1100 என்கிற இலவச நெம்பரை தொடர்புகொண்டு அருகில் இருக்கும் மைக்ரோசாஃப்ட் அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையத்தின் முகவரியை பெற்றுக்கொள்ளலாம்.
மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பாடப்பிரிவுகளில் படித்தவர்களும், படித்துக் கொண்டிருப்பவர்களும் எந்த வகுப்புகளில் பயிற்சி பெறலாம்?.
1. AutoCAD 3D, Solid Works, 2D CAD, Micro Station, Machine design (Dynamics &Analysis/ ADAMS), CATIA
மெஷினரி அல்லது பிராடெக்ஸ் சம்பந்தப்பட்ட பொருட்களை டிசைன் செய்வதற்காக இந்தப் பயிற்சி உதவியாக இருக்கும்.
www.kongumalar.com
2. Ansys,
இந்த சாஃப்ட்வேர் மூலம் Structural and Thermodynamic analysis, Continous flow analysis, analysis of electrostatic and electromangnetic fields and acoustic analysis உதவிக்காக பயன்படுகிறது.
3. Pro/ Engineer, Pro/ Engineer Mold Design, Pro/ Engineer Mechanism Design, HyperMesh
PTC Creo என்றும் கூட செல்லலாம். இந்த சாலிட் மாடலிங் சாஃப்ட்வேரில் 3D CAD/ CAM/ CAE வசதிகள் உள்ளன. இதுவும் டிசைன் சாஃப்ட்கேர் தான்.
4. NX CAD/ NX CAM/ NX Nastran,
ஆட்டோமொபைல் தொழிற்சாலையில் டிசைன் செய்வதற்காக இந்த சாஃப்ட்வேரை பயன்படுத்துகிறார்கள். இந்த சாஃப்ட்வேர் பயிற்சி பெற்றவர்களை ஆட்டோமொபைல் நிறுவனத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.
5. NDT Training & Certification,
ஒரு பொருளை சேதப்படுத்தாமல், பண்புகளை (Properties of materials) மதிப்பீடு செய்வதற்காக இந்தப்பயிற்சி உபயோகப்படும். இந்தப் பயிற்சியில் Ultrasonic, Magnetic-Particle, Liquid penetrant, Radiographic, Remote visual inspection, eddy current testing and low coherence interferometry பற்றிய பிரிவுகளை கற்றுத்தருவார்கள். மெக்கானிக்கல் என்ஜினீயரிங், பெட்ரோலியம், எலக்ட்ரிக்கல், சிவில், சிஸ்டம், ஏரோனாட்டிகல் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பணிபுரிய இந்தப் பயிற்சி உதவியாக இருக்கும்.
6. Welder Training Certification,
பலவிதமான வெல்டிங் பற்றிய தகவல்களை இப்பயிற்சியில் எடுத்துக்கொள்ளலாம். மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், ஏரோனாட்டிகல் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பணிபுரிய இந்தப் பயிற்சி உதவியாக இருக்கும்.
7. ISO Implementation & Certification,
பல நிறுவனங்களில் ஐ.எஸ்.ஓ சான்றிதழ் இருக்கும். வருடம் ஒரு முறை புதுப்பிக்க வேண்டுமெனில் நிறைய ரெக்கார்டுகளை பராமரிக்க வேண்டும். சில நிறுவனங்களில் இதனை செய்ய ஆட்கள் கிடையாது. இப்பயிற்சியை பெற்றிருந்தால், வேலை செய்யும் நிறுவனத்திலேயே கூடுதல் சம்பளம் பெறமுடியும்.
8. Industrial Safety.
இந்த பயிற்சியை முடித்தவர்கள் நல்ல சம்பளத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள். பல நிறுவனங்கள் பணியாளர்களின் பாதுகாப்புக்காக சேஃப்டி படித்தவர்களை தேர்வு செய்கிறார்கள். பணியின்போது பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்துவதே சேஃப்டி படித்தவர்களின் வேலை. என்ஜினீயரிங் படிப்பு சம்பந்தபட்ட வேலை கிடைக்கவில்லை என்றாலும், டிப்ளமோ இன் இன்டஸ்ட்ரீயல் சேஃப்டி சான்றிதழ் வைத்திருந்தால் சேஃப்டி அதிகாரியாகவும் பணியில் சேரலாம்.
9. ATILA, Inventor, Conventer, COMSOL
மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பணிபுரிய இந்தப் பயிற்சி உதவியாக இருக்கும்.
10. Cost Reduction.
ஒரு பொருளை தயாரிக்க சிக்கனமான முறையில் எப்படி செயல்படுவது என்பதை இப்பயிற்சியில் கற்றுக்கொள்ளலாம். மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், ஏரோனாட்டிகல் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பணிபுரிய இந்தப் பயிற்சி உதவியாக இருக்கும்.
சிவில் பாடப்பிரிவில் படித்தவர்களும், படித்துக் கொண்டிருப்பவர்களும் எந்த வகுப்புகளில் பயிற்சி பெறலாம்?.
1. 2D CAD, Auto CAD civil 3D, Revit Architecture, MX Road, Pro Steel, Design Visualization Pro, Max for Engineer/ Architects, STAAD Pro, Ansys Civil, Revit MEP, RCC Detailing,
சிவில் என்ஜினீயரிங் டிசைன் செய்வதற்காக இந்தப் பயிற்சி உதவியாக இருக்கும்.
2. Computer Aided Land Survey,
கணினியை பயன்படுத்தி நிலங்களை எப்படு அளவு எடுப்பது பற்றிய தகவல்களை இந்தப் பயிற்சியில் கற்றுக்கொள்ளலாம்.
www.kongumalar.com
3. Building Estimation and Costing,
பில்டிங் கட்டிவதற்கு பண மதிப்பிடுதல் செய்வதற்கு இந்தப்பயிற்சி உதவியாக இருக்கும்.
4. Primavera, PPM (Project Planning and Management) Concepts,
திட்ட மேலாண்மை, ஒத்துழைப்பு மற்றும் கட்டுப்பாடு திறன்களுக்காக இந்த சாஃப்ட்வேர் உதவியாக இருக்கும்.
5. Fire and Safety,
கட்டிடம் மற்றும் வீடுகளில் பாதுகாப்பான முறையை தெரிந்துகொள்ள இந்தப் பயிற்சி உதவியாக இருக்கும்.
6. First Aid Training.
கட்டுமான பணியின் போது, தொழிலாளர்களுக்கு விபத்து நேரிட்டால் முதல் உதவி செய்வதற்காக இந்தப் பயிற்சி உதவியாக இருக்கும்.
எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவில் படித்தவர்களும், படித்துக் கொண்டிருப்பவர்களும் எந்த வகுப்புகளில் பயிற்சி பெறலாம்?.
1. Embedded Controller and Control System,
நிறுவனங்களில் கையாள முடியாத பல்வேறு அமைப்பு பணிகளை இயக்குவதற்கு இந்தப்பயிற்சி உதவியாக இருக்கும்.
2. Electrical Fire Protection,
எலக்ட்ரிக்கல் மூலம் தீ விபத்து ஏற்படாமல் இருக்க இந்தப் பயிற்சி உதவியாக இருக்கும்.
3. C Programming,
மைக்ரோ கன்ட்ரோலர்களை புரோகிராம் செய்வதற்கு இந்தப் பயிற்சி உதவியாக இருக்கும்.
4. MicroProcessors,
கணினியில் இருக்கும் CPU செயல்பாடுகளை ஒருங்கிணைக்கப்பட்ட சர்க்யூட் தான் மைக்ரோ பிராசஸர். இதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இந்தப் பயிற்சியை எடுத்துக்கொள்ளலாம்.
www.kongumalar.com
5. Lean Manufacturing Technique and tools,
நிறுவனங்களில் உற்பத்தி செய்யும்போது ஏற்படும் கழிவுகளை எப்படி குறைக்க வேண்டும். அதற்கான வழிகள் என்ன என்பதை தெரிந்துகொள்ள இந்தப்பயிற்சி உதவியாக இருக்கும்.
6. Six Sigma Methodology,
நிறுவனங்களில் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டுமெனில் தவறுகளை கண்டுபிடித்து சரி செய்ய வேண்டும். அதற்கான பயிற்சிகளை இதில் பெற்றுக்கொள்ளலாம்.
7. Debugging & Soldering in SMD Boards,
SMD (Surface Mount Device) போர்ட் சர்வீசிங் பயிற்சி பெறுபவர்களுக்கு கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைக்க உதவியாக இருக்கும்.
8. Auto CAD Electrical, Electrical Design,
எலக்ட்ரிக்கல் சம்பந்தப்பட்ட பொருட்களை டிசைன் செய்வதற்காக இந்தப்பயிற்சி உதவியாக இருக்கும்.
9. PLC/ SCADA
PLC என்பது Programmable Logic Controller. தொழில் நிறுவனங்களில் ஆட்டோமெட்டிக் பயன்பாட்டிற்காக இப்பயிற்சி உதவியாக இருக்கும். இதை டிஜிட்டல் கம்ப்யூட்டர் என்றும் கூட சொல்லலாம். SCADA என்பது இன்டஸ்ட்ரீயல் கன்ட்ரோல் சிஸ்டன். அதாவது, கணினி மூலம் நிறுவனங்களில் நடக்கும் செயல்முறைகளை கண்காணிக்க உதவும். இந்த இரண்டு பயிற்சியையும் பெற்றவர்கள், தொழில் நிறுவனங்களில் வேலை கிடைக்க உதவியாக இருக்கும்.
10. Electrical Safety,
இந்த பயிற்சியை முடித்தவர்கள் நல்ல சம்பளத்தில் பணியில் அமர்த்தப்படுவார்கள். பல நிறுவனங்கள் பணியாளர்களின் பாதுகாப்புக்காக சேஃப்டி படித்தவர்களை தேர்வு செய்கிறார்கள். பணியின்போது பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்துவதே சேஃப்டி படித்தவர்களின் வேலை. என்ஜினீயரிங் படிப்பு சம்பந்தபட்ட வேலை கிடைக்கவில்லை என்றாலும், எலக்ட்ரிக்கல் சேஃப்டி சான்றிதழ் வைத்திருந்தால் எலக்ட்ரிக்கல் சேஃப்டி சூப்பர்வைசர் பணியில் சேரலாம்.
11. Power and Energy Generation, Study on Sub station, Heating Ventilation and Air Conditioning, Piping Design and Drafting (Process/ Oil and Gas), Transmission, Distribution and Electrical Systems
மின்சார உற்பத்தி, சப்-ஸ்டேஷன், வென்டிலேஷன் மற்றும் ஏ.சி, பெட்ரோலிய நிறுவனங்களில் பணிபுரிய விரும்புவோர் இதுபோன்ற பயிற்சிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
12. MAT Lab
Numerical Method மூலம் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் செயல்முறையை தேர்வுமுறை படுத்துவதற்கான சாஃப்ட்வேர் இது.
கெமிக்கல் பாடப்பிரிவில் படித்தவர்களும், படித்துக் கொண்டிருப்பவர்களும் எந்த வகுப்புகளில் பயிற்சி பெறலாம்?.
1. CHEMCAD
இரசாயன செயல்முறையை உருவகப்படுத்தும் சாஃப்ட்வேர் இது. இதன் மூலம் கெமிக்கல் என்ஜினீயர்களின் திறமைகளை விரிவடையச்செய்து, உற்பத்தித் திறனை அதிகரிக்கமுடியும். சவால்களாக இருக்கும் கடினமான இரசாயண செயல்முறைகளை எதிர்கொள்ளவும் இந்த சாஃப்ட்வேர் உதவியாக இருக்கும்.
2. Ariane
மின் உற்பத்தி நிறுவனத்தின் பயன்பாடுகள் மேலாண்மை மற்றும் தேர்வுமுறைக்காக இந்த சாஃப்ட்வேரை பயன்படுத்துகிறார்கள்.
3. Cyclo-Tempo
மின்உற்பத்தி, ஹீட் & ரெஃப்ரிஜிரேஷன் நிறுவனத்தில் (Thermodynamic analysis and optimization of systems for production) வெப்ப இயக்கவியல் ஆய்வு மற்றும் உற்பத்தி அமைப்புகள் தேர்வுமுறைக்காக இந்த சாஃப்ட்வேர் பயன்படுகிறது.
www.kongumalar.com
4. HYDROFLO, PIPE-FLO Professional
ஆயில் நிறுவனங்களில் குழாய் வடிவமைப்புக்காக இந்த சாஃப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது.
5. MAT LAB
Numerical Method மூலம் இரசாயண செயல்முறையை தேர்வுமுறை படுத்துவதற்கான சாஃப்ட்வேர் இது.
6. AVIVA
AutoCAD போன்று இதுவும் ஒரு டிசைன் சாஃப்ட்வேர் தான். கெமிக்கல் என்ஜினீயரிங் சம்பந்தப்பட்ட பொருட்களை டிசைன் செய்வதற்கு இந்த சாஃப்ட்வேர் உதவியாக இருக்கும்.
7. Aspen
இரசாயண செயல்முறையை தேர்வுமுறை படுத்துவதற்கான சாஃப்ட்வேர் இது. இதன் மூலம் டிசைன், ஆப்ரேஷன், பாதுகாப்பான உற்பத்தியை கொண்டுவர முடியும்.
8. OLGA (Oil & Gas Simulator)
ஆயில் & கேஸ் நிறுவனங்களில் இந்த சாஃப்ட்வேரை பயன்படுத்துகிறார்கள். ஒரே குழாயில் ஆயில், கேஸ் மற்றும் தண்ணீர் என மூன்று வகையான பொருட்களை அனுப்பும்போது, அடைப்பு ஏற்படும். அதனால் பெரிய பிரச்சனைகள் கூட ஏற்படும். இதுபோன்று சிரமங்கள் ஏற்படாமல் இருக்கவே OLGA சாஃப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் Fluid flow வை கணக்கிட்டு பாதுகாப்பாக வேலை செய்ய உதவும்.
9. SmartPlant
இந்த சாஃப்ட்வேர் மூலம் Project Execution Improvement, Handover & Plant Efficiency யை அதிகரிக்க முடியும்.
10. ProMax
கெமிக்கல் நிறுவனத்தில் செயல்முறை சரிசெய்தல் மற்றும் வடிவமைப்புக்காக இந்த சாஃப்ட்வேர் பயன்படுகிறது.
AutoCAD is used by everyone from engineers and architects to interior designers and draftspeople. But, with so many options and features available, finding your way around AutoCAD can be a challenge, even for experienced CAD professionals.
ReplyDeleteCAD Drawings | CAD drafting Services