எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் பெட்ரோல் விலையை ஏற்றி இருக்கிறது . விலையை ஏற்றாமல் இருக்க ஒரு வழி இருக்கிறது.

நடுத்தர மக்கள் பயன்படுத்தும் இரு சக்கர வாகனகள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சராசரியாக 40 கி.மீட்டரும்,நான்கு சக்கர வாகனங்கள் 15 முதல் 20 கி.மீ வரையும் தருகிறது.

ஆனால் பணக்காரர்கள் பயன்படுத்தும் விலை உயர்ந்த வாகனங்கள் 4 முதல் 10 கி.மீ வரை மட்டுமே தருகின்றது.

ஒரு நடுத்தர குடும்பத்து நபர் ஒரு ஆண்டு பயன்படுத்தும் பெட்ரோலின் அளவை ஒரு பணக்கார நபர் இரண்டு மாதங்களில் செலவழிக்கிறார்.

இந்த வகையில் இந்தியா இறக்குமதி செய்யும் பெட்ரோலில் 60 விழுக்காடு பயன்படுத்துவது பணக்காரர்கள்தான்.

ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் குறைவாக மைலேஜ் தரும் விலை உயர்ந்த கார்களுக்கு, சாலை வரியை போல எரிபொருள் வரி என்ற ஒன்றை வாகனங்களின் விலையோடு சேர்த்து வசூலிக்கும் திட்டத்தை அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்தால்,

எண்ணெய் நிறுவனங்கள் கச்சாப்பொருள் விலை ஏற்றத்தினால் நட்டத்தை சந்திக்கும் வேலையில், எரிபொருள் வரியினால் கிடைக்கும் நிதியினைக் கொண்டு சரி படுத்த இயலும்.இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும்.

அதோடு மட்டுமல்லாது ஒரு கோடி ரூபாய்
கொடுத்து கார் வாங்கும் பணக்காரர்களுக்கு
கூடுதலாக 5 லட்சம் ரூபாய் எரி பொருள் வரியாக அரசுக்கு தருவது பெரும் சுமையாக இருக்கப் போவதில்லை

இது 10 விழுக்காடுக்குக் குறைவானதுதான். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் 5
விழுக்காடுதான்.

நீதி மன்ற தீர்ப்பின் கணக்கை ஆராய்பவர்கள், இந்த கணக்கையும் ஆராயட்டும்...

Posted by: Sathiyarasu

No comments:

Post a Comment