தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் மருத்துவ சேவைப் பிரிவில் உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் (Assistant surgeon) பணிக்கு ஏற்பட்டிருக்கும் தற்காலிக காலியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நேர்முகத் தேர்வை நடத்த இருக்கிறது.
Anaesthesiology, Anatomy, Biochemistry, Blood transfusion, Dermatology, Forensic medicine, General Medicine, General Surgery, Microbiology, Nuclear medicine, Obstetrics and Gynaecology, Opthalmology, Orthopaedics, paediatrics, pathology, pharmacology, Physical and rehab medicine, physiology, phychiatry, radio diagnosis, radio therapy, social preventive medicine, TB & Chest disease பிரிவுகளில் எம்.பி.பி.எஸ் (MBBS) டிகிரியுடன் பி.ஜி டிப்ளமோ அல்லது பி.ஜி டிகிரி படித்திருக்க வேண்டும். Cardiology, Gastro enterology, medical oncology, Nephrology, Neurology, Cardio Thoracic surgery, Neuro surgery, paediatric surgery, plastic surgery, urology, vascular surgery பிரிவுகளுக்கு Super Speciality டிகிரியை படித்திருக்க வேண்டும். கூடவே தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலில் தங்களது பெயரை பதிவு செய்திருக்க வேண்டும். அத்துடன், பனிரெண்டு மாதத்திற்கு குறையாமல் House Surgeon (CRRI) ஆக இருந்திருக்க வேண்டும். நன்றாக தமிழ் பேச தெரிந்தவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இந்த ஆண்டு ஜூலை 01 ஆம் தேதி நிலவரப்படி, பொது பிரிவினர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினைச் சேர்ந்தவர்கள் 57 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு முறை:
இந்தப் பணிக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. டிகிரியில் பெற்றிருக்கும் மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். சென்னையில் நேர்முகத் தேர்வை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
1. விண்ணப்பிக்கும் முன் புகைப்படம் மற்றும் கையெழுத்தை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
2. தங்களை தொடர்பு கொள்வதற்கு சரியான மொபைல் நெம்பர் மற்றும் இ-மெயில் முகவரியை கொடுக்க வேண்டும்.
3, www.mrb.tn.gov.in என்கிற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.
4. விண்ணப்ப கட்டணம் ரூ.375/- (தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிக்கு), ரூ.750/- (மற்றவர்களுக்கு). கட்டணத்தை ஆன்லைனிலோ அல்லது ஆஃப்லைனிலோ செலுத்தலாம். ஆஃப்லைனில் செலுத்த விரும்புபவர்கள் சலானை பிரிண்ட் எடுத்து இந்தியன் வங்கியில் செலுத்தவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.09.2014
ஆன்லைனில் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி: 16.11.2015
ஏதேனும் உதவிக்கு 1860 345 0112 என்கிற இலவச எண்ணை அழைக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி: 16.11.2015
ஏதேனும் உதவிக்கு 1860 345 0112 என்கிற இலவச எண்ணை அழைக்கலாம்.
Notification http://www.mrb.tn.gov.in/pdf/MRB_Asst_Surgeon_Speciality_Detailed_Notification_02_2015.pdf
Online Application Registration http://www.mrbexam.in/