ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வேலை

ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் தொழில் நுட்ப உதவியாளர், மின் உதவியாளர், வாகன சீராளர் (வேன் கிளீனர்) ஆகிய காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தொழில் நுட்ப உதவியாளர், மின் உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்க 18 வயதிலிருந்து 28 வயதிற்குள் இருக்க வேண்டும். வாகன சீராளர் (வேன் கிளீனர்) பணிக்கு விண்ணப்பிக்க 18 லிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் வகுப்பு அல்லது டிப்ளமோ 

விண்ணப்பிப்பது எப்படி?.
பெயர், முகவரி, பிறந்ததேதி, கல்வி, அனுபவ தகுதி மற்றும் பிற விவரங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதனுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், சான்றிதழ்களின் நகல்களை இணைத்து செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், 4 – வது மாடி, ஈரோடு என்ற முகவரிக்கு வருகிற 10-ந் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment