slider

­

இப்படியே போனா, இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் மாற்றம் நிச்சயம்.

2011 ஆம் ஆண்டு முதலமைச்சர் பதவிக்கு தேர்தல் நடக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு, தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நிலவரம் பற்றிய சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். அந்த சமயங்களில், லட்சக்கணக்கான மக்களை சந்திக்க நேர்ந்தது. ஊழல் பிரச்சனையால் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்று பலரின் கருத்து. அதை விட முக்கியமான ஒரு விஷயம் உள்ளது. கிராமங்களில் ஊழல் பற்றிய விஷயங்களை மக்களிடம் கேட்டால் "ஏதோ அப்படித் தான் வந்து மைக்ல பேசுரவிங்க எல்லாம் சொல்றாங்க" னு சொல்பவர்கள் தான் அதிகம். அதைவிட மக்களின் நேரடி பிரச்சனை பவர்கட் தான். திருச்சியில் சுற்றுபயணம் முடித்துவிட்டு, இரவு நேரத்தில் தஞ்சாவூர் சென்றுகொண்டிருந்தோம். வாகனங்களை தடுத்து நிறுத்தி நெடுஞ்சாலையில் மக்கள் போராட்டம் செய்துகொண்டிருந்தனர். இது கட்சி போராட்டம் இல்லைங்க. உண்மையானது. "கரண்ட் இல்லாமல் குழந்தைகள் தூங்க முடியவில்லை. தேர்வுக்கு படிக்க முடியவில்லை" என்று மக்களின் குரல் அதிகமாகவே இருந்தது. அந்த சமயத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வு. போலீஸ் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் மக்கள் கேட்கும் ஒரே கேள்வி. "இரவு நேரங்களில் கரண்ட் போகாதுனு சொல்லுங்க" என்று தான். பவர்கட் பிரச்சனை திருச்சியில் மட்டும் இல்லைங்க. தமிழ்நாடு முழுவதும் இருந்தது. இந்த நேரடி பிரச்சனையால் தான், மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
www.kongumalar.com

மறுபடியும் வருகிறது அதே பிரச்சனை

ஆட்சி மாற்றம் கொண்டுவந்த பிரச்சனை மறுபடியும் தொடங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கரண்ட் பிரச்சனை படிப்படியாக குறைந்தது என்றும் கூட சொல்லலாம். ஆனால் ஒரு வாரமாக தமிழ்நாடு முழுவதும் பவர் கட் பிரச்சனை. இந்த பிரச்சனை இப்படியே தொடர்ந்தால், நிச்சயம் மக்கள் மாற்றத்தை விரும்புவார்கள் என்பதே உறுதி.

No comments:

Post a Comment