வங்கிகளில் 2009 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 2014 மார்ச் 31 ஆம் தேதி வரை கல்விக்கடன் பெற்றவர்களுக்கு வட்டித்தொகையை மத்திய அரசு தள்ளுபடி செய்தது. ஆனால் வங்கிகள் தள்ளுபடி செய்யாமல் ஏமாற்றி வருவதாக மத்திய அரசுக்கு புகார் சென்றுள்ளன.
அதனால், 28.8.2015 அன்று இந்திய வங்கிகள் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் "கல்விக்கடனுக்கு அரசு அறிவித்துள்ள வட்டி தள்ளுபடியை, வங்கிகள் உடனே அளிக்க வேண்டும். வட்டி தள்ளுபடியை பெற தகுதியுடைய மாணவர்களின் விவரங்களை, வங்கியின் இணையதளங்களில் வெளியிட வேண்டும். இணையதளத்தில் விவரங்கள் வெளியிட்டுள்ளது குறித்தும் அறிக்கை வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கூறியுள்ளது. இதையேற்று, அனைத்து வங்கிகளும், 2009 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 2014 மார்ச் 31 ஆம் தேதி வரை கல்விக்கடன் பெற்றவர்களுக்கு வட்டி தள்ளுபடி அளிக்க வேண்டும். மாணவர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு. மாணவர்களே வங்கிகளை அணுகி, வட்டி தள்ளுபடியை பெறலாம்" என்று குறிப்பிட்டிருந்தன.
மாணவர்கள் வட்டி தள்ளுபடி பெற வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட வங்கியில் மனு கொடுக்க வேண்டும். வட்டி தள்ளுபடியை தர மறுக்கும் வங்கிகள் மீது சம்பந்தப்பட்ட வங்கியின் தலைவரிடம் புகார் செய்யலாம்.
Article by: www.kongumalar.com
புகாரின் பிரதியை, webmaster@iba.org.in என்கிற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம்.
ஆதாரம்:
In canara bank they r telling to pay the interest after year. actually I am a MBA graduate fresher... Manager said we will extent the time only like that...
ReplyDelete