தமிழகத்தில் இருப்பதற்கு முகவரி ஆதாரமாக கருதுவது ரேஷன் கார்டும் தான். ஏன், பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டும் முக்கியமான ஒன்று. அப்படிப்பட்ட ரேஷன் கார்டை வாங்குவதற்கு மக்கள் எவ்வளவோ சிரமப்பட்டு வருகிறார்கள். பணம் கொடுத்தால் தான் கையெழுத்துனு சொல்லும் அதிகாரிகளும் இருக்கிறார்கள். பணம் கேட்காமல், கையெழுத்து போடும் அதிகாரிகளும் இருக்கிறார்கள்.
புதிய ரேஷன் கார்டை விண்ணப்பிக்க வேண்டும் என்றால் 5 ரூபாய் போதும். ஆனால், ரேஷன் கார்டுக்கு 1000 ரூபாயில் இருந்து 5000 ரூபாய் வரை மக்கள் பணம் கொடுக்கிறார்கள். எதற்காக ஏமாறுகிறீர்கள்?. இனிமேலும் ஏமாற வேண்டாம். ரேஷன் கார்டு வாங்கித்தருகிறேன் பணம் கொடுங்கள் என்று கேட்பவர்களை உடனே கைது செய்யப்படும். பணம் கேட்பவர்களை, வீடியோ/ போட்டோ ஆதாரத்துடன் அல்லது பெயர் மற்றும் பதவியை கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் புகார் தரலாம். புகார் தருபவர்களை பாதுகாக்க, ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும். புகார் அனைத்தும் கலெக்டரின் பார்வைக்கு எடுத்துச்செல்லப்பட்டு உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
புகார் எண்: 0424-2260211 அல்லது 78069-17007
இலவச எண்: 1077 (உள்ளூர்), 0424-1077 (வெளியூரில் இருந்து அழைப்பவர்களுக்கு)
வாட்ஸ்அப்: 78069-17007
பேஸ்ஃபுக்: District Collector Erode பக்கத்தில் புகார்களை பதியலாம்.
விண்ணப்பித்த 60 நாட்களில் ரேஷன் கார்டு வரவில்லை என்றால் dso.erd@tn.gov.in என்கிற இ-மெயில் முகவரிக்கும் புகார் அனுப்பலாம்.
Article By www.kongumalar.com
தமிழ்நாட்டில் இருப்பவர்கள் புகார் தர: https://goo.gl/EQoidq
No comments:
Post a Comment