அதிர்ச்சியூட்டும் தகவல்!!!! நம்ம செய்து வரும் சிறிய தவறுகளால், இனிமேல் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் இருந்து 30 சதவிதத்தை வரியாக செலுத்தவேண்டும்.

இந்த வருடம், இந்திய பட்ஜெட்டில் 12.36% சேவை வரியில் இருந்து 14% சேவை வரியாக அதிகரித்துள்ளனர். அடுத்த வருடம் 14% சேவை வரியில் இருந்து 20 சதவிதமாக அதிகரிக்கப்போகிறது. அதற்கு அடுத்த வருடம், 25 சதவிதம் என அதிகரித்துக்கொண்டே தான் போகுமே தவிர, குறைய வாய்ப்பிள்ளை. எப்படி என்று நினைக்கிறீர்களா?.
எதிர்கால நலன்கருதி வெளியிடுவோர் www.kongumalar.com

நம்ம என்ன தவறு செய்கிறோம்?.

பல தவறுகளை, நமக்கே தெரியாமல் செய்துவருகிறோம். அந்த தவறுகளால், நமக்கு மட்டுமே பாதிப்பு. மத்திய அரசுக்கோ, மாநில அரசுக்கோ இல்லை. இதைப் புரிந்தவர்கள் புத்திசாலிகள்.

1. வெயில் காலங்களில், நிலத்தடி நீர் குறைவாகவே இருக்கும். ஆனால் தண்ணீர், குழாய்களில் வரும்போது வீணாகுவதே அதிகம். தெருக்களில் இருக்கும் குழாய்களில் மக்கள் தண்ணீரை பிடித்தால், நிறுத்துவதே கிடையாது. தமிழ்நாட்டில், நிறைய பகுதிகளில் இதைப் பார்த்துள்ளோம். மக்களிடம் எடுத்துச்சொன்னால், "அரசுதான கரண்ட்பில் கட்டுதுனு" அக்கறையின்றி சொல்கிறார்கள். இதே மக்கள், வரட்சி காலங்களில் தண்ணீர் இல்லைனு காலிக்குடங்களுடன் போராட்டமும் செய்கிறார்கள். அரசுக்கு வருமானமே நம்ம பணம்னு, நிறைய மக்களுக்கு தெரியாமலே இருக்கிறது.

2. தமிழகத்தில் 80 சதவித மக்கள் வீட்டில் இருக்கும் குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுவதே இல்லையாம். நினைத்த இடங்களில், பிளாஸ்டிக் பொருட்களையும், குப்பைகளையும் போடுகிறோம். நிறைய மக்களிடம், விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். ஆனால், சில மக்களிடம் இருந்து வரும் முதல் பதில். "குப்பையை சுத்தம் செய்வதற்குத் தான் துப்புறவு பணியாளர்கள் இருக்கிறார்களே". நம்ம குப்பைகளை குப்பைத்தொட்டியில் போட்டால், நாடும் சுத்தமாக இருக்கும், துப்புறவு பணியாளர்களை வேறு எதாவது பணியிலும் பயன்படுத்திக்கொள்ளலாம். துப்புறவு பணியாளர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளமும் நம்ம பணம்னு, நிறைய மக்களுக்கு தெரியாமலே இருக்கு. (ஒரு வார்டுக்கு மட்டும் குறைந்தபட்சம் 10 தொழிலாளர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான வார்டுகள் இருக்கிறது. கணக்குப்போட்டுப்பாருங்க).
சாக்கடை அடைப்பை சுத்தம் செய்யும் தொழிலாளர் ஒருவர் டீ குடிக்க பத்து ரூபாய் கொடுங்கனு கேட்ட. சில்லறை இல்லைனு சொல்லி கொடுக்கமாட்டோம். நம் நலனுக்காக, கஷ்டப்படும் அவருக்கே பத்து ரூபாய் கொடுக்க தயங்குகிறோம். ஆனால், நம்ம செய்யும் இதுபோன்ற சிறிய தவறுகளால், மறைமுகமாக வரியை செலுத்தி வருகிறோம். இப்படி இந்த தவறுகள் நீடித்துவந்தால். இந்த வருடம் பட்ஜெட்யில் 12.36 லிருந்து 14 சதவித சேவை வரி அதிகரித்தது போல. ஒவ்வொரு வருடமும் சேவை வரி அதிகரித்துக்கொண்டேதான் போகும். தற்போது 100 ரூபாய்க்கு 14 ரூபாயை சேவை வரியாக செலுத்தி வருகிறோம்.

No comments:

Post a Comment