இந்திய அரசின் கீழ் ரயில்வே அமைச்சகத்தின் மூலம் இயங்கி வரும் இந்திய ரயில்வே நிறுவனத்தில் ஜூனியர் என்ஜினீயர், டிபாட் மெட்டீரியல் சூப்பரின்டன்ட், கெமிக்கல் & மெட்டலர்ஜிகல் அசிஸ்டண்ட், சீனியர் செக்ஷன் என்ஜினீயர், சீஃப் டிபாட் மெட்டீரியல் சூப்பரின்டன்ட் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழகத்தை உள்ளடக்கிய தெற்கு ரயில்வே மண்டலத்திற்கு மட்டும் 241 காலியிடங்கள் உள்ளன. அதில் ஜூனியர் என்ஜினீயர் 153 காலியிடங்களும், சீனியர் செக்ஷன் என்ஜினீயர் பதவிக்கு 88 காலியிடங்களும் உள்ளன. இந்த ஆண்டு ஜூலை முதல் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 20 வயதுக்குக் குறையாமலும் 32 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: சீனியர் செக்ஷன் என்ஜினீயர் பணியில் சேர விரும்புவோர் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கட்ரானிக்ஸ், மெஷினிங், இன்ஸ்ட்ரூமென்டேஷன் & கன்ட்ரோல், ஆட்டோமொபைல், புரோடெக்ஷன், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, பவுண்டரி என்ஜினீயரிங் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஜூனியர் என்ஜினீயர் பணியில் சேர விரும்புவோர் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கட்ரானிக்ஸ், மெஷினிங், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் & கன்ட்ரோல், புரோடெக்ஷன், ஆட்டோமொபைல், டெலிகம்யூனிகேஷன் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ சான்றிதல் பெற்றிருக்க வேண்டும்.
கெமிக்கல் மெட்டலர்ஜிகல் அசிஸ்டண்ட் பணியில் சேர விரும்புவோர் கெமிக்கல், மெட்டலர்ஜி துறையில் பி.இ/ பி.டெக் பட்டம் அல்லது கெமிஸ்ட்ரி, அப்ளைடு கெமிஸ்ட்ரி துறையில் எம்.எஸ்.சி டிகிரி படித்திருக்க வேண்டும்.
ஆன்லைன் தேர்வு எப்படி நடைபெறும்?
ஆன்லைன் தேர்வுக்கு மொத்தம் 150 மதிப்பெண்கள். அப்ஜெக்ட்டிவ் முறையில் எழுத்துத் தேர்வு இருக்கும். பொது அறிவு, அரித்மெட்டிக், general intelligence, general science, technical ability மற்றும் ரீசனிங் ஆகிய ஆறு பிரிவுகளின் கீழ் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு, அரித்மெட்டிக், general intelligence மற்றும் ரீசனிங் பிரிவில் இருந்து 60 கேள்விகளும், general science, technical ability பிரிவில் இருந்து 90 கேள்விகளும் கேட்கப்படும். ஆன்லைன் தேர்வுக்கு மொத்தம் 2 மணி நேரம் வழங்கப்படும். இத்தேர்வை இந்த ஆண்டு ஆகஸ்ட் 22 தேதியிலிருந்து செப்டம்பர் 05 தேதிக்குள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வில் நெகடிவ் மார்க் முறை பின்பற்றப்படுகிறது. அதாவது தவறாக பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 1/3 மதிப்பெண், பெறும் மொத்த மதிப்பெண்களில் இருந்து கழிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் மருத்துவ பரிசோதனை நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?.
1. பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100/- (ஆண்களுக்கு மட்டும்). தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
2. விண்ணப்பங்களை இணையதளம் வழியாக மட்டுமே சமர்பிக்க முடியும். புதியதாக விண்ணப்பிப்பவர்கள் இணையதளத்தில் இருக்கும் “NEW REGISTRATION" பிரிவுக்குச் சென்று தங்களின் விவரங்களை பூர்த்தி செய்யவும்.
3. பின்னர், Login id மற்றும் பிறந்த நாள் மற்றும் வருடத்தைப் பயன்படுத்தி ஆன்லைன் விண்ணப்ப படிவத்தின் பகுதிக்குச் செல்லவும். அதில் சரியான மொபைல் நம்பர் மற்றும் இ-மெயில் முகவரியை கொடுக்கவும்.
4. செலானை பிரிண்ட் அவுட் எடுத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் அல்லது போஸ்ட் ஆஃபீஸில் கட்டணத்தைச் செலுத்தலாம். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலமாகவும் கட்டணத்தைச் செலுத்தலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு இ-மெயில் கணக்கு இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை குறித்து இணையதளத்தில் விரிவான தகவல்கள் உள்ளன.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.7.2015
விவரங்களுக்கு: www.rrbchennai.gov.in
No comments:
Post a Comment