+2 படித்தவர்களுக்கு மத்திய அரசு துறைகளில் 6,578 வேலைகள்


எஸ்.எஸ்.சி எனப்படும் ஸ்டாப் செலக்சன் கமிஷன் பல்வேறு மத்திய அரசுத்துறை பணியிடங்களை நிரப்பி வருகிறது. தற்போது பல்வேறு துறைகளில் ஏற்பட்டிருக்கும் போஸ்டல் அசிஸ்டன்ட்/ சார்டிங் அசிஸ்டன்ட், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் மற்றும் Lower divisional கிளார்க் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்காக 'காம்பைன்ட் ஹையர் செகண்டரி லெவல் (10+2) எக்ஸாமினேசன், 2015' தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
போஸ்டல் அசிஸ்டன்ட்/சார்டிங் அசிஸ்டன்ட் பணிக்கு 3523 காலியிடங்களும்,  Lower divisional கிளார்க் பணிக்கு 2049 காலியிடங்களும், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கு 1006 காலியிடங்களும் உள்ளன. இந்த பணிகளில் சேர விரும்புவோர் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்குக் குறையாமலும் 27 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதேபோன்று விதவைகள், விவாகரத்தான பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் படைவீர்ர்களுக்கும் வயது வரம்பில் விலக்கு உண்டு.
எப்படி தேர்ச்சி செய்கிறார்கள்?.
விண்ணப்பதாரர்கள்ழுத்து தேர்வு, தட்டச்சு தேர்வு மற்றும் திறமைத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அடுத்தகட்டமாக, அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.
அப்ஜெக்ட்டிவ் முறையில் எழுத்துத் தேர்வு இருக்கும். எழுத்துத் தேர்வில் General Intelligence, English Language, Quantitative aptitude, General awareness ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் 50 மதிப்பெண்கள் உள்ளன. இத்தேர்வுக்கு இரண்டு மணி நேரம் வழங்கப்படும். கண் பார்வையற்றோர்களுக்கு மட்டும் இத்தேர்வில் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் வழங்கப்படும். இந்த ஆண்டு நவம்பர் 01, 15, 22 ஆகிய தேதிகளில் எழுத்துத் தேர்வு நடைபெறும். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, புதுச்சேரி ஆகிய இடங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களை அடுத்தகட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கு Skill Test நடத்தப்படும். Skill Test தேர்வில் ஒரு மணி நேரத்திற்குள் 8000 key depressions யை வேகமாக கணினியில் செய்ய வேண்டும். இத்தேர்வுக்கு 15 நிமிடங்கள் வழங்கப்படும். போஸ்டல் அசிஸ்டன்ட்/ சார்டிங் அசிஸ்டன்ட் மற்றும் Lower divisional Clerk  ஆகிய பணிகளுக்கு தட்டச்சு தேர்வு நடத்தப்படும். இதில் 35 ஆங்கில வார்த்தைகளை ஒரு நிமிடத்தில் தட்டச்சு செய்ய வேண்டும். இரண்டு தேர்விலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, அடுத்தகட்டமாக சான்றிதழ் சரிபார்க்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?.
விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் மற்றும் தபால் முறைகளில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் பார்ட்-1 மற்றும் பார்ட்-2 முறைகளில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை 2 கணினிப் பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ளவும். தபால் மூலம் விண்ணப்பிப்பவர்கள் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அதில் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கிழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணங்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் செலுத்தலாம். ஆன்லைனில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். ஆஃப்லைன் மூலம் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த விரும்புவோர், அருகில் இருக்கும் தபால் அலுவலகத்தில் "CRFS – Central Recruitment fee stamps" மூலம் செலுத்தலாம் அல்லது SBI வங்கியில் Challan மூலமும் செலுத்தலாம். பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் படைவீரர்கள், மாற்றுத்திறனாளி மற்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Regional Director (SR),
Staff Selection Commission,
EVK Sampath Building, 2nd Floor,
College Road, Chennai,
Tamil Nadu-600006
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 13.07.2015
மேலும் விவரங்களுக்கு: http://ssconline.nic.in and http://ssconline2.gov.in
உதவிக்கு: SSC(SR) Chennai - 09445195946, 04428251139

No comments:

Post a Comment