சேலம் மாவட்டத்தில் காலியாக இருக்கும் 310 சமையல் உதவியாளர் பணிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். பெண்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும். பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பழங்குடியினர் எழுத படிக்க தெரிந்தால் போதுமானது. இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர் வயது வரம்பு 21 லிருந்து 40க்குள்ளும், பழங்குடியினர் வயது வரம்பு 18 லிருந்து 40க்குள்ளும், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர் 20 லிருந்து 40 வயதிற்குள் இருக்க வேண்டும். பணி நியமிக்கும் இடத்திற்கும் வீட்டிற்கும் 3 கி.மீ சுற்றளவிற்குள் இருக்க வேண்டும். மாற்றித்திறனாளியாக இருப்பின் சமையல் பணியை மேற்கொள்ளும் உடற்தகுதியோடு இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப படிவங்களை அந்தந்த ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் ஜூன் 30 ஆம் தேதி வரை பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கல்வி, வயது, ஜாதி, இருப்பிடம், வருவாய், ஆதார் அட்டை ஆகிய சான்றிதழ்களின் நகல்களை சேர்த்து சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் ஜூலை 3 ஆம் தேதிக்குள் ஒப்படைக்கப்பட வேண்டும்.
தகுதிவாய்ந்த மனுதாரர்களுக்கு நேர்முக தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பப்படும். அந்த தேதியில், குறிப்பிட்ட இடத்தில் நேர்முக தேர்வுக்கு அழைக்கும் போது, பள்ளிக்கல்வி இறுதி சான்று, மதிப்பெண் பட்டியல், இருப்பிட சான்று, குடும்ப அடையாள அட்டை, சாதிச்சான்று மற்றும் கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்பட்ட தூரச்சான்று ஆகிய அசல் சான்றுகளுடன் நேரில் வர வேண்டும். ஆதரவற்ற விதவை, விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றுடன் நேரில் வர வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் 310 சமையல் உதவியாளர் வேலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment