(கொங்குமலரும், இளையதலைமுறையினரும் சேர்ந்து செயல்படும் ஒர் பசுமை புரட்சி).
நாளைய கூட்டதில், நீங்களும் பங்கேற்கலாம்.
ஈரோடு மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் அபாயங்களை எடுத்துச்சொல்லி, குப்பைகளுக்கு வரும் பிளாஸ்டிக் பொருட்களை குறைத்தால். நிச்சயம், ஈரோடு பசுமை மாநகராட்சியாக மாறும்.
என்ன செய்கிறோம்?.
நம் அன்றாட வாழ்க்கையில், பிளாஸ்டிக் பொருட்கள் மிகவும் அவசியமானதாகிவிட்டது. அப்படி இருக்கும் பொழுது, பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க வேண்டாம் என்று சொன்னால். யாரும் கேட்க மாட்டார்கள். பிளாஸ்டிக் பொருட்களை குப்பை தொட்டியில் போடாமல் இருக்க. ஒரு புதிய முயற்சியை கொண்டு வர இருக்கிறோம். அந்த முயற்சியால், பிளாஸ்டிக் பொருட்கள் குப்பையில் வருவதற்கு வாய்ப்பே இல்லை.
பிளாஸ்டிக் கழுவுகளினால்
என்ன அபாயம்?.
பிளாஸ்டிக் பொருட்களை எரிக்கும் பொழுது, மீத்தேன் கேஸ் வெளிவரும். அதனால், எதிர்காலத்தில் கேன்சர் நோய் வருவதற்கு வாய்ப்புள்ளது.
பிளாஸ்டிக் பொருட்கள் குப்பையிலோ, மண்ணிலோ இருக்கும் போது, மழை நீர் அதில் தேங்கி நின்று கொசுக்களை உருவாக்கும். கொசுக்கள் அதிகரித்தால், டெங்கு போன்ற கொடிய நோய் வரும் வாய்ப்புள்ளது.
பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் கழந்தால், எதிர்காலத்தில் அது மக்காமல் பல வருடம் மண்ணிலேயே இருக்கும். அப்படி இருக்கும் போது, மழை காலங்களில் மழை நீர் பூமிக்குச் செல்வதை தடுக்கும். அதுமட்டும் இல்லாமல், வெள்ள அபாயத்தையும் ஏற்படுத்தும்.
இதை இப்படியோ விட்டால், எதிர்காலத்தில் உங்களது பேரன் பேத்திகளுக்கு குடிக்க தண்ணீர் கூட கிடைக்காதுங்க?.....
புதிய முயற்சியை, முதல் கட்டமாக ஒரு பகுதியில் தொடங்குகிறோம். இதற்கு நீங்களும் உதவி செய்ய வேண்டும்.
பணம் வேண்டாம், உதவி மட்டும் போதும். அதற்கான கலந்துரையாடல், நாளை (10.05.2015) காலை 11 மணி அன்று ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானத்தில் நடைபெற உள்ளது. பசுமைப் புரட்சியில் நீங்களும் கலந்துகொள்ளலாம்.
விரைவில் தமிழகம் முழுவதும் இந்த முயற்சியை செயல்படுத்துவோம்...
Contact: 7402291000
No comments:
Post a Comment