உங்கள் வீட்டு பக்கத்தில் பிரச்சனையா?. யாரும் அதை கண்டுகொள்ளவில்லையா?. கவலை வேண்டாம், நாங்கள் இருக்கிறோம். நீங்களும், இங்கு பதிவு செய்யலாம்!!

ஏன் தான் ஓட்டு போட்டோம்னு சொல்ற அளவுக்கு, நிலைமை மாறுவிட்டது. பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றி, மாநகராட்சியை வெளிநாடு போல் ஆக்கிறோம்னு சொன்னாங்க?. இப்பதான் தெரியுது, பாதாள சாக்கடைக்கு நம்மகிட்டையும் வீட்டு வரியுடன் சேர்த்து பணம் வாங்குகிறார்கள். பாதாள சாக்கடைனு சொல்லிட்டு, சும்மா கடமைக்கு பைப் போட்டுள்ளார்கள். சரி, அப்படித்தான் பாதாள சாக்கடை போட்டார்களே, குழி பறித்த இடத்தில் ரோடு போட வேண்டாமா?. இதிலும் பாரபச்சம், பணக்காரர்கள் இருக்கும் ஏரியாக்களில், உடனே ரோடு வந்துவிட்டது. ஏன் அவர்கள் மட்டும் தான் ஓட்டுப் போட்டார்களா?. இல்லை, அவர்கள் தான் கேள்வி கேட்கிறார்களா?. 


பாதாள சாக்கடைத் திட்டம் தேவையா?. 


நல்ல கனமான மழை பெய்தால், ரோட்டு ஓரத்தில் இருக்கும் டிச்சில் கூட தண்ணீர் போக மாட்டிங்குது?. அப்படி இருக்கும் போது, சின்ன பைப் மூலம் தண்ணீர் எப்படி போகும்?. சென்னையில், கனமழை வந்தால் ரோடு முழுவதும் சாக்கடை தண்ணீராகத் தான் இருக்கும். சென்னை வாசிகளை கேட்டுப்பாருங்கள். சிலர், மழைவரும் போது, சாக்கடை மூடியை திறந்துவிடுவார்கள். அதில், தெரியாமல் எத்தனை பேர் விழுந்துள்ளார்கள் தெரியுமா?. ஆனால், எங்க ஊரு டிச்சில், அந்த பிரச்சனைகள் இல்லைங்க?.
ஒரு வேளை பாதாள சாக்கடை பைப்பில் அடைப்பு வந்தால், எப்படி சரி செய்ய முடியும்?. ஆனால், டிச்சில் யார் வேண்டுமானாலும், அடைப்பை சரி செய்துகொள்ளலாம்.
ரோட்டை குழி தோண்டி பாதாள சாக்கடை போட தெரிந்த நமக்கு, ரோடு போடத் தெரியாதா?. ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் ரோட்டில் பாதாள சாக்கடை போட்டு 5 மாதம் ஆகியும், இன்னும் ரோடு போடவில்லை. இரண்டு புறமும் வாகனம் செல்லும் அந்த ரோட்டில், தற்போது ரோடு சரியில்லாமல் இருப்பதால், ஒரு புறம் மட்டுமே வாகனம் செல்ல முடிகிறது. இது மக்களுக்கு பாதுகாப்பா, விபத்து ஏற்படாதா?. இதுதான் மக்களுக்கு செய்யும் நன்மையா?. உங்களிடம் யாருங்க, பாதாள சாக்கடை கேட்டாங்க?.
ஒரு போட்டோவை கையில் சுமந்தால், நல்ல ஆட்சி செய்ய முடியுமா?. அந்த போட்டோவை, டேபிள் மேட்டில் வைத்துவிட்டு. வந்து மக்களுக்கு பணியைச் செய்யுங்கள். இல்லையெனில், அடுத்தமுறை உங்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காது.


(இப்படிக்கு,
மக்களின் குமுறல்.) 


இதுபோன்ற பிரச்சனை, உங்களது வீட்டு பக்கத்தில் இருந்தால். எங்களுக்கு ஒரு பேப்பரில் எழுதி, அதை போட்டோ எடுத்து tnsuggestion@gmail.com என்கிற இ-மெயில் ஐ.டிக்கு அனுப்புங்கள். முதலமைச்சருக்கு, நம் ஏரீயாவில் நடுக்கும் பிரச்சனைகளை தெரியப்படுத்துவோம்.

No comments:

Post a Comment