வங்கியில் வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?.
டிகிரி முடித்துவிட்டோம், ஆனால் வேலை கிடைக்க வில்லை. என்ன செய்வது, எல்லோரும் வங்கிப் பணியில் சேர வேண்டும் என்ற ஆர்வத்துடன், பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வரை செலவு செய்து வங்கித் தேர்வு பயிற்சிக்கு செல்கிறார்கள். அப்படி சென்றவர்கள் அனைவருக்கும் வங்கியில் வேலை கிடைத்துவிட்டதா?. ஏன், நிறைய புத்தகங்களை படித்து டிகிரி வாங்கத் தெரிந்த நமக்கு. இரண்டு அல்லது மூன்று புத்தகங்களை பயன்படுத்தி பயிற்சி செய்தால் வங்கி வேலை கிடைக்காதா?. பயிற்சி செய்தால் கண்டிப்பாக வேலை கிடைக்கும். உங்களுக்கு வங்கியில் வேலை கிடைக்க சில டிப்ஸ்கள்.
1. வங்கிகள் சம்பந்தபட்ட தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள். (அதாவது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் எத்தனை?. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் என்ன?. இது போன்று நிறைய தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.)
2. இத்துறை உங்களுக்கு புதிதாக இருந்தாலும், பொதுவான தகவல்கள் தெரிந்துகொண்டால் போதும்.
3. காமர்ஸ் பிரிவில் டிகிரி படித்தவர்களுக்கு வங்கித் தேர்வு பயிற்சியில் சிரமம் இருக்காது.
4. வீட்டு அருகில் இருக்கும் வங்கியின் அதிகாரி அல்லது மேலாளரின் நட்பு மிகவும் உதவியாக இருக்கும். முடிந்தால் அவர்களிடம் புரோபெஸ்னரி அதிகாரி அல்லது கிளார்க் போன்ற பதவிகளில் இருப்பவர்கள் வங்கியில் என்ன வேலை செய்கிறார்கள் என்பது பற்றி கேட்கலாம். உங்களுக்கு உதவியாக இருக்கும்.
5. வங்கித் தேர்வு மாதிரி வினா-விடை மற்றும் வங்கித் தகவல்களை பற்றி அறிய புதியதலைமுறை கல்வி வார இதழ் போன்ற புத்தகங்களை வாங்கிப் படியுங்கள்.
6. வங்கிகளில் காலியாக இருக்கும் வேலை வாய்ப்புகள் பற்றி இலவசமாக தெரிந்துகொள்ள www.kongumalar.com யைப் பாருங்கள்.
7. வங்கித் தேர்வு சம்பந்தபட்ட புத்தகங்கள் (Reasoning, English Language, Quantitative aptitude, Professional knowledge) கடைகளில் கிடைக்கிறது. அதை வாங்கி பயிற்சிகளை ஆரம்பிக்கலாம்.
8. உங்களது நண்பர்களுக்கு வங்கி வேலை கிடைத்திருந்தால், அவரிடம் தேர்வுக்கு பயிற்சி எடுத்த அனுபவத்தைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த டிப்ஸ்களை பின்பற்றினால் கண்டிப்பாக உங்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. விடாமுயற்சிக்கு தோல்விகள் கிடையாது.
வங்கியில் வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment