லாபம் தரும் தொழில்கள்

தொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான்

நமது சிறிய சேமிப்பினை வைத்து தேவையறிந்து தொழில் செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதனை பயன்படுத்த நாம் தவறக்கூடாது. மத்திய அரசும், மாநில அரசும் தொழில் முனைவோருக்கு மானியம் வழங்குகிறது.

மானியம் வழங்கப்படும் தொழில்கள்:

மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி
தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு
வாக உதிரிப்பாகங்கள் தயாரிப்பு
மருந்துப் பொருட்கள் உற்பத்தி
சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி
ஏற்றுமதி ஆபரணங்கள்
மாசுகட்டுப்பாடு உபகரணங்கள்
விளையாட்டுப் பொருட்கள்
சிக்கன கட்டுமானப் பொருட்கள்
ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவைகள்

அரசு வழங்கும் சலுகைகள்:

15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது.
சிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு((வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது.
உற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்த பட்ச 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்தவும் நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை வேலை வாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் தொடங்கி சலுகைகள் பெற பின்தங்கிய வட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. 1971 ஆம் ஆண்டு சிப்காட் என்ற சிறு தொழில் மையம் அரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு 1803 தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவைகள் எவை  என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம்.

உங்கள் கையில் உள்ள சேமிப்பினை வைத்து தொழில் தொடங்க வங்கிகளின் மானேஜரை அனுகி உங்கள் தொழில் தொடங்கும் திட்டம் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் மனுவில் நீங்கள் செய்யப்போகம் தொழில், மொத்த முதலீடு எவ்வளவு, யார்-யார் பங்குதாரர், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முதலீடு, செய்யப்போகும் தொழிலின் மார்க்கெட் நிலவரம், வருமானம் எப்படி, வங்கிக்கடனை எந்த வழியில் திருப்பிச் செலுத்துவது, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய உத்திரவாதம்(சூரிட்டி) போன்ற விபரங்களை மனுவுடன் இணைக்க வேணடும். அதனை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அதன் பின்பு வங்கிக்கடன் மூன்று வருடத்திலிருந்து பத்து வருடத்திற்குள் செலுத்தினால் 13 சதவீதத்திலிருந்து 16 சதவீதம் வட்டியுடன் அசல் தொகையும் வசூலிக்கப்படும். கடன் தொகையினை ஒழுங்காக செலுத்தினால் கூடுதலாக கடன் பெறலாம். தொழில் தொடங்கி உற்பத்தி செய்யும் போது அந்த உற்பத்திப் பொருட்களை ஈடாக வைத்து கடன் பெறலாம். தொழிற்சாலை, கட்டிடம், எந்திரம், கச்சாப்பொருட்கள் என்று தனித்தனியாக கடன் பெறலாம்

சுயதொழில் எப்படி தொடங்குவது?
ஒரு கிராமத்தில் வசிக்கும் 12 முதல் 20 ஏழை பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மையுடன் உருவாக்கப்பட்டதே சுயவேலைக் குழு.  வருமானம், கல்வியறிவு, வேலையின்மை, சொத்து அடிப்படையில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள 21 வயது முதல் 60வயது வரை பெண்கள் சுய உதவிக்குழு தொடங்கலாம். அப்படி தொடங்கப்பட்ட குழு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தில்(என்.ஜி.) மூலம் மாவட்ட மகளிர் திட்டத்தில் இணையலாம். அந்தக் குழுவில் கல்வியறிவு பெற்ற ஒருவர் செயல் இயக்குனராகவும், விபரம் தெரிந்தவர் இயக்குனராகவும், மற்றும் இரண்டு பிரதிநிதிகள் கொண்ட செயற்குழுவினை ஏற்படுத்திக் கொள்ளலாம். அந்தக் குழு ஆரம்பித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சங்க சேமிப்பில் உறுப்பினர்களுக்கு அவசர மருந்துச் செலவு, கல்விச் செலவு, தொழில் தொடங்க மூலதனம் குறைந்த காலத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ500 லிருந்து கடன் வழங்கலாம். சிறப்பாக செயல்படும் குழுக்கழுக்கு வங்கிகளில் ரூபாய் ஐந்து லட்சம் வரை 12 சதவீத வட்டியில் கடன் பெறலாம். அரசுக் கடனில் ரூபாய் ஐந்து லட்சத்திற்கு ரூபாய் 1,75,00 மானியமாகப் பெறலாம். ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணிக்கு முஸ்லிம் பெண்களை அழைத்துச் செல்லும் சமுதாய இயக்கங்கள் ஏழைப் பெண்கள் கவுரவமாக வாழ மேற்கூறிய சுயவேலை தொழில் மையங்களை அவர்களுக்கு ஏற்படுத்தலாமே!

ஒருங்கிணைப்பு:

முன்பெல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவலமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டியதிருந்தது. அதனை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்கச் செய்து எளிதாக்கியுள்ளார்கள். கீழ்கண்ட மையத்தில் மனு செய்தாலே உங்களுக்குத் தேவையான அனுமதி கிடைக்கும்.

செயல் துறைத் தலைவர்(வழிகாட்டுதல் குழு),
தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு,
19, ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர்,
சென்னை-600001
தொலைபேசி: 044-28553118, 285553866
 ஃபேக்ஸ்: 28588364

தொழில் நுணுக்கங்கள்:
தொழில் தொடங்கிய உடனே வெற்றியடைய முடியாது. திட்டமிட்டு சரியான இயக்கத்தில் தொடங்கினால் வெற்றி பெற முடியும். நமது வாடிக்கையாளர்களை நம்முடைய அனுகுமுறை வைத்தே தக்க வைக்க முடியும்
உங்கள் தொழில் நிறுவன உற்பத்திப் பொருள்கள் போட்டி நிறுவனங்களை விட தரமானது என்று மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். தொழிலில் சுமுகமான  அணுகு முறையே வெற்றிக்கு வழிவகுக்கும.
 

லாபம் தரும் தொழில்கள்


1. மூலிகை டீ தயாரிப்பு

உடல்நலனுக்கு சிறந்த மூலிகை டீ, காபித்தூள் தயாரிப்பது எளிதானது. ஆரோக்கிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், மூலிகை டீ, காபித்தூள் தயாரித்து விற்றால்  நல்ல லாபம் கிடைக்கும்

வழக்கமாக டீ, காபி அதிகம் குடித்தால் பித்தம் என்பர். தலைவலி, சளி, அஜீரணம், பசியின்மையை மூலிகை டீ நீக்கும். மூலிகை காபி ரத்த அணுக்களை அதிகப்படுத்தும். உடல் வலிமை, புத்துணர்ச்சி ஏற்படும். மூலிகைகள் பக்க விளைவுகள் இல்லா தவை.

உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தி பலன் பெறலாம். குறைந்த முதலீட்டில் லாபம் கிடைக்கும் மூலிகை டீ, காபி பொடியை யார் வேண்டுமானாலும் எளிதில் தயாரிக்கலாம். தங்கள் பகுதியிலேயே விற்று லாபம் பார்க்கலாம்.

தயாரிப்பது எப்படி?

மூலிகை டீத்தூள் தயாரிக்க ஆவாரம் பூ, தாமரை, ரோஜா, செம்பருத்தி, வாழை பூ, வேம்பு, அகத்திப் பூ ஆகிய 7 வகை பூக்கள் தலா ஒரு கிலோ எடுத்து கொள்ள வேண்டும். அவற்றை தனித்தனியாக நல்ல தண்ணீரில் கழுவி, சுத்தம் செய்து 2 மணிநேரம் காய வைக்க வேண்டும். பின்னர் அதை மெஷினில் அரைத்து, சலித்தால் மூன்றரை கிலோ மூலிகை பொடி கிடைக்கும். அதில் 2.5 கிலோ டீத்தூள் கலந்தால் மூலிகை டீத்தூள் தயார்.

மூலிகை காபி பொடி தயாரிக்க  சுக்கு, மிளகு விதை, திப்பிலி, மல்லி, சீரகம், விளாமிச்சை வேர், அஷ்வகந்தா போன்ற 7 வகை பொருட்கள் தலா ஒரு கிலோ எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை தனித்தனியாக காய வைத்து, மெஷினில் அரைத்து, சலித்தால் மூன்றரை கிலோ மூலிகை பொடி கிடைக்கும். அதில் 2.5 கிலோ காபித்தூள் கலந்தால் மூலிகை காபித்தூள் தயார். மூலிகை டீ, மூலிகை காபி தூள்களை 100 கிராம் பாக்கெட்களில் பேக்கிங் செய்து விற்பனைக்கு அனுப்பலாம்.

எங்கு கிடைக்கும்?
மூலிகை பொருள்கள் கோவை, மதுரை, தூத்துக்குடியில் உள்ள நாட்டு மருந்துக் கடைகளிலும், கேரள மாநிலம் மூவாட்டுப்புழா மற்றும் பாலப்பட்டியில் உள்ள நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.  மெஷின்கள் கோவை உள்பட முக்கிய நகரங்களில் கிடைக்கிறது. இதர பொருட்கள் உள்ளூரிலேயே கிடைக்கும்.

தேவையான கட்டமைப்பு?

அரைக்கும் மெஷின், சலிக்கும் மெஷின், பேக்கிங் மெஷின் நிறுவ குறைந்தபட்சம் 20க்கு 10 அடி அறை. மூலிகை பொருட்கள் மற்றும் பேக்கிங் பொருட்களை இருப்பு வைக்க 10க்கு 10 அடி அறை. மூலிகைகளை காய வைக்க 10க்கு 10 அடியில் சிமென்ட் தளம் போட்ட வெட்டவெளி.

முதலீடு?

அரைக்கும் மெஷின் ரூ.25 ஆயிரம், சலிக்கும் மெஷின் ரூ.5 ஆயிரம், பேக்கிங் மெஷின் ரூ.3 ஆயிரம், தராசு ரூ.4 ஆயிரம், பாத்திரங்கள் ஆயிரம் ரூபாய் என மொத்த முதலீடு ரூ.38 ஆயிரம்.

உற்பத்தி செலவு (ஒரு மாதத்துக்கு)

ஒரு இயந்திரம் மூலம் தினசரி 6 கிலோ மூலிகை டீத்தூள்,  6 கிலோ மூலிகை காபித்தூள் உற்பத்தி செய்யலாம். 6 கிலோ மூலிகை டீ தயாரிக்க தலா ஒரு கிலோ ஆவாரம் பூ (ரூ.50), தாமரை(ரூ.160), ரோஜா (ரூ.200), செம்பருத்தி (ரூ.200), வாழைப்பூ (ரூ.40), வேம்பு (ரூ.50), அகத்தி(ரூ.200) என 7 கிலோ மூலிகை பூக்கள்  மற்றும் 2.5 கிலோ டீத்தூள் (ரூ.335) தேவை. இதன் விலை ரூ.1235. 25 நாளில் 150 கிலோ மூலிகை டீத்தூள் தயாரிக்க ரூ.30,875 தேவை.

6 கிலோ மூலிகை காபித்தூள் தயாரிக்க தலா ஒரு கிலோ சுக்கு (ரூ.240), மிளகு விதை(ரூ.300), திப்பிலி(ரூ.500), மல்லி (ரூ.40), சீரகம் (ரூ.160), விளாமிச்சை வேர் (ரூ.120), அஷ்வகந்தா (ரூ.190) மற்றும் 2.5 கிலோ காபிதூள் (ரூ.400) தேவை. இதன் விலை ரூ.1950. 25 நாளில் 150 கிலோ மூலிகை காபித்தூள் தயாரிக்க ரூ.48,750 தேவை.

2 தொழிலாளர் சம்பளம் ரூ.12 ஆயிரம், மின் கட்டணம் ரூ.3 ஆயிரம், இதர செலவுகள் ரூ.3 ஆயிரம் என ஒரு மாத உற்பத்திக்கு ரூ.98 ஆயிரம் தேவை.
வருவாய் மூலிகை டீ, காபித்தூள் 100 கிராம் பாக்கெட்களில் பேக்கிங் செய்யப்படுகிறது. மொத்த விற்பனை விலை ரூ.32 (சில்லரை விலை ரூ.40), காபி பாக்கெட் மொத்த விற்பனை விலை ரூ.42 (சில்லரை விலை ரூ.50)க்கு விற்கலாம். வருவாய் 150 கிலோ மூலிகைடீத்தூள் மூலம் ரூ.48 ஆயிரம், 150 கிலோ மூலிகை காபித்தூள் மூலம் ரூ.63 ஆயிரம் என மொத்தம் ரூ.1.11 லட்சம் கிடைக்கும். லாபம் ரூ.13 ஆயிரம். நேரடியாக விற்றால் கூடுதல் லாபம் கிடைக்கும்.

விற்பனை வாய்ப்பு
டிபார்ட்மென்டல் ஸ்டோர், மொத்த மளிகைக் கடைகளுக்கு விற்பனை செய்யலாம்.  சிறிய மளிகைக்கடைகளுக்கும் சப்ளை செய்யலாம், வீடு, வீடாகவும் அறிமுகப்படுத்தி விற்கலாம். சாதாரண டீ, காபியை விட மூலிகை டீ, காபி குடிப்பது ஆரோக்கியத்தை தருவதால் வாடிக்கையாளர் அதிகரிக்கின்றனர். விற்பனை பெருகி வருகிறது.

2. எலுமிச்சையில் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பாதிக்கலாம்

திண்டுக்கல் அருகே கோட்டைப்பட்டியை சேர்ந்த விவசாயி ஜெ.சரவணன் ஒரு ஏக்கரில் எலுமிச்சை சாகுபடி செய்தார். இவர்ராஜமுந்திரிஎன்ற நாட்டு ரகத்தை கன்றுக்கு ரூ.50 வீதம் வாங்கினார். 2 அடி ஆழம் 2 அடி அகலம் உள்ள குழிகள் தோண்டி அதில் குப்பையை கொட்டி கன்றுகளை நட்டார். ஒவ்வொரு கன்றும் 20 க்கு 20 அடி இடைவெளியில் நடப்பட்டது. ஒரு ஏக்கரில் 100 கன்றுகளை நட்டார். இயற்கை விவசாய முறையில் உரமிட்டு வருகிறார்

செடிகள் நட்டு 4 ஆண்டுகளுக்கு பின் காய்க்க துவங்கியது. ஒரு மரத்தில் 100 காய்களுக்கு குறையாமல் காய்க்கின்றன. ஒவ்வொரு பழமும் குறைந்தது 80 கிராம் வரை உள்ளது. சில பழங்கள் 120 கிராம் வரை உள்ளன (சாதாரணமாக 60 கிராம்). தலா ஒரு மாத இடைவெளியில் ஆண்டுக்கு 3 முறை காய்க்கின்றன. ஒவ்வொரு முறையும் 12 வாரங்கள் வரை தொடர்ந்து காய்களை பறிக்கின்றனர். வாரத்திற்கு 400 கிலோ காய்கள் கிடைக்கின்றன. குறைந்தது ரூ.10 ஆயிரம் வரை கிடைக்கிறது.

"எலுமிச்சை செடிகளுக்கு கால்நடைகளின் எரு, கழிவு, குப்பையை உரமாக இடுகிறோம். பசுந்தாள் உரங்களும் பயன்படுத்துகிறோம். 15 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சுகிறோம். நாட்டுரகம் என்பதால் 80 ஆண்டுகள் வரை காய்க்கும். செடிகளை முறையாக பராமரிக்கிறோம். இதனால் காய்கள் பறிப்பதில் சிரமம் இல்லை என்கிறார் விவசாயி.

No comments:

Post a Comment