வெள்ளோடு பறவைகள் சரணாலயம்











நீர் வறச்சி காலங்களில் விவசாயம் செய்வதற்காக ஒரு நீர் சேகரிப்புக் குலம். அதைச் சுற்றி நிறைய மரங்கள். பறவைகளின் சத்தம் தவிற வேறு வித சத்தமும் இல்லாத இடம். இவை அனைத்தும், ஈரோட்டிலிருந்து சென்னிமலை செல்லும் பாதையில் வெள்ளோடு சரணாலயத்தில் உள்ளது.
வெள்ளோடு சரணாலயம் செல்வதற்கு, ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து மூலம் பயணம் செய்யலாம்,அல்லது வாகனங்கள் மூலம் செல்ல விரும்புபவர்கள். ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து சென்னிமலை பாதையில் 15 கி.மி பயணம் செய்ய வேண்டும்.
சரணாலயம் பற்றிச் சொல்லுங்கள் என்று பணியாளரிடம் கேட்ட போது, அதற்கு அவர் " நீர் சேகரிப்பு குலத்தில் வாய்காலில் வரும் நீரினாலும்,மழையினாலும் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும். இங்கு 77.185 ஹெக்டர் பரப்பளவு உள்ளது. 110க்கு மேல் வகையான பறவைகள் வந்து செல்கின்றன. வெளிநாட்டுப் பறவைகளில் ஆண்டிவாத்து, வண்ணநாரை பெலிக்கான் போன்ற பறவைகள் புதிதாக வந்திருக்கிறது.
சீசன் காலங்களில் பறவைகள் நிறைய வருகின்றது. பறவைகளின் சீசன் காலம் ஆகஸ்ட் முதல் பிப்ரவரி வரை. மற்ற காலங்களில் பறவைகள் குறைவாக இருக்கும்.
மாலை 5 மணி முதல் பறவைகள் தங்குவதற்கு வரும்போது அனைத்து வகைகளையும் பார்க்கலாம். காலை 8 மணிக்கு மேல் பறவைகளில் சில வகைகள் மட்டுமே பார்க்க முடியும்" என்றார்.
வெளியூரிலிருந்து வரும் பார்வையாளர்களுக்கு பறவைகளைப் பார்த்து ரசிப்பதற்க்காக நிழற்குடை மற்றும் கழிப்பிட வசதிகள் உள்ளது. அங்கு உள்ள பணியாளர்கள் பறவைகளைக் காப்பதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தி வருகின்றார்களாம்.
அங்கு சென்று பார்வையிடுபவர்கள், தயவு செய்து பறவைகளை தொந்தரவு செய்யாமலிருக்க செல்பேசியை அனைத்து அல்லது நிசப்தம் செய்துவிடுங்கள்.

No comments:

Post a Comment