கடை திறப்பு விழா, சமூக சேவைக்கு சிறப்பு விருந்தினர், கல்லூரியில் விழா என பல நிகழ்ச்சிகளுக்கு அரசு அதிகாரிகளை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வருகிறீர்கள். அது தவறு இல்லை என்று ஒரு பக்கம் நினைத்தாலும். மறைமுகமாக பெரிய தவறுகளை செய்து வருகிறோம்.
என்ன தவறு?.
தினமும் செய்தித்தாளை பார்த்தால், இவர் கடைகளை திறந்தார். அவர் கடைகளை திறந்தார் என்று அரசு அதிகாரிகளின் போட்டோ போட்டு விளம்பரம் செய்கிறோம். அரசு அதிகாரிகளுக்கு விளம்பரம் முக்கியமில்லை. அவர்களின் பணியை செய்ய விட்டாலே போதும்.
உதாரணத்திற்கு:
ஒரு போலீஸ் அதிகாரியை சிறப்பு விருந்தினராக அழைக்கிறோம். வரமுடியாது என்று சொன்னால், தவறாக நினைத்து விடுவார்களோ என்று அவரும் விருந்தினராக வருகிறார். அவரது அலுவலகத்தில் மக்களின் புகார்கள் நிறைய இருக்கிறது, நேரடியாகவும் புகார் கொடுக்கிறார்கள். இந்த புகார்களுக்கு சரியான நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா?. என்று பார்க்கக்கூட நேரமில்லாமல் இருக்கிறார். திடீரென்று பிரச்சனை என்றால் அதையும் பார்க்க வேண்டும். இதுவே, தொழில் அதிபர் ஒரு மணி நேரம் செலவு செய்தால், அவருக்கு பதிலாக வேறு ஒருவர் அந்த வேலையை செய்வார்கள். அரசு அதிகாரிகளை பொறுத்தவரை, அவர் தான் அந்த வேலையை செய்ய வேண்டும். ஒரு மணி நேரம் என்பது அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்போது. நாளை சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றால், அந்த போலீஸ் அதிகாரி எப்ப பார்த்தாலும் சிறப்பு விருந்தினராகவே செல்கிறார் என்றும் மக்கள் பேசுவார்கள்.
இந்த பதிவு யாரையும் புண்படுத்துவதற்காக இல்லை. அதிகாரிகளின் சவால்களையும், கஷ்டங்களையும் புரிந்துகொள்வதற்காக மட்டுமே..
இப்படிக்கு,
நேர்மையான பத்திரிக்கையாளன் (www.kongumalar.com)
No comments:
Post a Comment